Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் அறிமுகமாகும் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி போன்!

இந்திய மொபைல் நிறுவனமான லாவா இன்றையதினம் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.

இந்தியாவில் அறிமுகமாகும் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி போன்!

KarthigaBy : Karthiga

  |  5 March 2024 9:10 AM GMT

இந்திய மொபைல் நிறுவனமான லாவா விரைவில் லாவா பிளேஸ் 5ஜி என்னும் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்கிறது. இதன் சிரப்பம்சங்கள் குறித்து வெளிவந்துள்ளதாவது :-

லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் டைமண்ட் சிட்டி 7050 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். 8 ஜி.பி ரேம் மற்றும் 256 ஜி.பி மெமரி வசதியுடன் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதன் கர்வ்டு டிஸ்ப்ளேவில் 120 ஹெட்ஸ் ரெஃப்ரெஷ்ரேட் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. 64 எம்.பி ட்ரிபிள் அமைப்பை கொண்டுள்ளது. மேலும் செல்ஃபி களுக்கும் வீடியோக்கள் அழைப்புகளுக்கும் இன்றி 16 எம்.பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகிறது.


இந்த ஸ்மார்ட் போன் 5000 எம்.ஏ.எச் பேட்டரி வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் யு.எஸ்.பி டைப் சி போர்ட் 3.5 mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவரும் .அதன்படி லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 16,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News