Kathir News
Begin typing your search above and press return to search.

பி.பி.சி நிறுவனம் மீது வழக்கு - அந்நியச் செலவாணி விதிமுறை மீறலால் அமலாக்கத்துறை அதிரடி !

அன்னிய செலவாணி விதிமுறை மீறல் காரணமாக பி.பி.சி நிறுவனம் மீது அமலாக்கத்துறை அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

பி.பி.சி நிறுவனம் மீது வழக்கு - அந்நியச் செலவாணி விதிமுறை மீறலால் அமலாக்கத்துறை அதிரடி !

KarthigaBy : Karthiga

  |  14 April 2023 3:15 PM GMT

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த இன கலவரங்களில் அப்போது அங்கு முதல் மந்திரியாக இருந்த தற்போதைய பிரதமர் மோடிக்கு பங்கு உண்டு என்று காட்டும் இரண்டு ஆவண படங்களை தயாரித்து லண்டன் பி.பி.சி நிறுவனம் வெளியிட்டது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரி துணியினர் அதிரடி சோதனைகளை நடத்தினர். இது பழிவாங்கல் நடவடிக்கை என எதிர் கட்சிகள் விமர்சித்தன. ஆனால் வரி ஏய்ப்பு மற்றும் பல்வேறு முறை கேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.


சோதனைகள் நடந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் அன்னியச் செலவானியை முறைகேடாக பயன்படுத்தியதாக பி.பி.சி மீது மத்திய அமலாக்கத்துறை வழக்கப்பதிவு செய்துள்ளது. பி.பி.சியிடம் இருந்து சில ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துடன் கேட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பி.பி.சி அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News