Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு பணத்தை அள்ளி இறைக்க முடியாது! பிரதமர் மோடி அரசின் அடுத்த அதிரடி - இனி திறமையானவர்களுக்கே வேலை!

அரசு பணத்தை அள்ளி இறைக்க முடியாது! பிரதமர் மோடி அரசின் அடுத்த அதிரடி - இனி திறமையானவர்களுக்கே வேலை!

அரசு பணத்தை அள்ளி இறைக்க முடியாது! பிரதமர் மோடி அரசின் அடுத்த அதிரடி - இனி திறமையானவர்களுக்கே வேலை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Nov 2019 12:33 PM GMT


இந்திய ரயில்வே வாரியத்தின் செயல் திறனை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கு ஆட்குறைப்பு செய்வதுதான் ஒரே வழி என்றும் 2000-ஆவது ஆண்டில் அன் றைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் திட்டம் முன்மொழியப்பட்டது. அதாவது, குறைந்த பட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுகை (Less government maximum governance) என்ற கொள்கை கொண்டுவரப்பட்டது.


இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மீண்டும் அந்த திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதன்படி இருக்கும் பணியிடங்களில் 25 சதவிகிதம் தேவையில்லாத பணியிடங்கள் ஒழித்துக்கட்டப்படும்.


அந்த வகையில், ரயில்வே வாரியத்தில் இயக்குநர் நிலையில் இருக்கும் 200 அதிகாரிகள் பணியிடங்களை 150 ஆக குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இங்கு ஏற்கெனவே பணியாற்றிக் கொண்டிருந்த 50 அதிகாரிகளை மண்டலங்களுக்கு பணியிடமாறுதல் செய்துள்ளது.


ஐஆர்எஸ்இ மற்றும் ஐஆர்டிஎஸ்-ஸில் இருந்து தலா 10 அதிகாரிகள், ஐஆர்ஏஎஸ்-ஸில் இருந்து 7, ஐஆர்எஸ்எம்இ-யில் இருந்து 6, ஐஆர்எஸ்இ மற்றும் ஐஆர்எஸ்எஸ்இ-யில் இருந்து தலா 5, ஐஆர்எஸ்எஸ் மற்றும் ஐஆர்பிஎஸ்-ஸில் தலா 3, ரயில்வே பாதுகாப்புப் படையில் 1 என மொத்தம் 50 உயரதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News