அறிந்து கொள்வோம் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் வேலெடுத்தல் திருவிழா!
அறிந்து கொள்வோம் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் வேலெடுத்தல் திருவிழா!
By : Kathir Webdesk
மதுரையிலிருந்தது சுமார் 8 கிலோமீட்டா் தூரத்தில் உள்ளது திருப்புரங்குன்றம் முருகன் கோவில். இத்தலமானது முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகும். இத்தலமானது ஒரு குடைவரைத் தலமாகும் . இங்குள்ள குடைவரைக் கோயில்கள் சுமார் 8 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் இருந்தது. இந்த தலத்தின் சிறப்பு என்னவென்றால், இந்திரன் மகளான தேவயானையுடன் முருகனின் திருமணம்நடைபெற்ற இடமாகும். பழம்பெருமைகளை கொண்டது, இத்திருத்தலம்.கோவில் மதில்களில் மற்றும் தூண்களில்வரலாற்று சிற்பங்கள் உள்ளன.
கடத்த காலத்தில் இங்கு பூதம் இருந்துள்ளது. பூதத்தின் சாபம் விலகுவதற்கு , சிவனை நினைத்து தவம் செய்பவர்கள் தனது தவத்திலிருந்து விலகினால் அவர்களை பிடித்து சிறையில் அடைப்பது ஆகும். அவ்வாறு தவத்திலிலிருந்து தவறியவர்கள் கிட்டத்தட்ட 999 பேரை சிறைபிடித்துள்ளது.
சிவனுக்கு எதிராக வாதம் செய்த நக்கீரர் அந்த பாவத்தை போக்குவதற்கு குளத்தில் தவம் செய்து வந்துள்ளார்.அந்த சமயத்தில் குளத்தில் மிதந்து வந்த ஓர் இலையை பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளார். அந்த தருணத்தில் தவத்திலிருந்து சற்று விலகினார் நக்கீரர். இதை கண்ட அந்த பூதம் நக்கீரானாரைப் பிடித்துக் சிறையிட்டது. சிறைப்பட்ட நக்கீரர் தன்னையும் சிறைப்பட்ட அனைவரையும் காப்பாற்ற முருகனை நினைத்துத் திருமுருகாற்றுப்படை எழுதி பாடினார், அவர் பாட்டிற்கு செவி சாய்த்த முருக பெருமான் நக்கீரருக்கு காட்சிகொடுத்து, பூதத்தை சம்ஹாரம் செய்தார்.சிறைபிடிக்கப்பட்ட சிவ பக்தர்கள் 1000 பேரையும் மீட்டர்.
நக்கீரர் தன் சிவன் பாவத்தை போக்க காசிக்குச்சென்று நீராட வேண்டும் என முடிவு செய்திருந்தார். ஆனால் சுப்ரமணியனார் தனது வேலால் பாறையை உடைத்து குன்றத்தில் காசித்தீர்த்தம் வரச்செய்தார். அதில் நீராடி பாவம் போக்கினார் நக்கீரர் என்கிறது புராணம்.
இந்த வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில், முருகனின் வேலானது மலைக்குச் எடுத்து செல்வார்கள் இந்த விழாவினை மலைக்கு வேலெடுத்தல் விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடுவார்கள்.
வேலெடுக்கும் விழாவை அங்கு வசிக்கும் கிராம மக்கள் தான் நடத்துவார்கள். இத்திருவிழாவானது மழைக்காக நடைபெறும் வழிபாடாகவும் கிராம மக்கள் கொண்டாடுகின்றனர். இவ்விழா காலை 9 மணிக்கு தொடங்கும் முருகப்பெருமானின் வேல் கோவிலிலிருந்து பல்லக்கில் வைத்து மலையேறும். அங்குள்ள காசிவிஸ்வநாதருக்கு எதிராக உள்ள மலைமேல் குமாரரிடம் வேல் சேர்க்கப்படும். மாலையில் அங்கிருந்து பல்லாக்கில் புறப்படும் வேல் மலையிறங்கி அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர் தலத்தை வந்தடையும். இதன் பின்னர் பூப்பல்லக்கில் வைத்து மூலவர் சந்நிதிக்கு வேல் சென்றடையும்.
இந்நாளில் மூலவருக்குப் பதில் வேலுக்கு மட்டுமே அபிஷேகங்கள். பூஜைகள். நடைபெறும் இவ்விழாவிற்கு தயாராகி வருகிறது திருப்புரங்குன்றம்