Kathir News
Begin typing your search above and press return to search.

ராமருக்காக பிரம்மாண்டமான கோயில் அமைக்க ஒன்று படுவோம் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

ராமருக்காக பிரம்மாண்டமான கோயில் அமைக்க ஒன்று படுவோம் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

ராமருக்காக பிரம்மாண்டமான கோயில் அமைக்க ஒன்று படுவோம் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Nov 2019 11:53 AM GMT



அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார்.சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அயோத்தி தீர்ப்பை பற்றி நாட்டு மக்களிடையே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்


அப்போது ராம ஜென்மபூமி தொடர்பாக மக்களின் நம்பிக்கை ,நியாயம் தரக்கூடிய வகையில் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது இதனை ஆர்எஸ்எஸ் வரவேற்கிறது என்றார்,பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த வழக்கு கடைசியில் சட்டப்படியான முடிவுக்கு வந்துள்ளது,சத்தியம், நியாயம் என உயர்த்திப் பிடித்து தீர்ப்பளித்த அனைத்து நீதிபதிகளும், அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் தமது நன்றி கலந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.


இந்த நீண்ட முயற்சியின் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்களை நன்றியுடன் நினைவு கூறுவதாக அவர் தெரிவித்தார்,நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ற பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் அரசு எடுக்கும் என நம்புகிறேன் ,ராமருக்கு பிரம்மாண்ட ஆலயம் அமைப்பதற்கு இதுவரை நடந்ததை மறந்து ,நாம் அனைவரும் ஒன்றிணைந்து ராமருக்காக பிரம்மாண்டமான கோயில் அமைக்க ஒன்று படுவோம் என்று கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News