ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவோம்- பிரதமர் மோடி!
ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
By : Karthiga
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 19-ஆம் தேதி ,இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 26 -ஆம் தேதியும் நடைபெற்றது .மூன்றாம் கட்ட தேர்தல் வரும் ஏழாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கோவாவில் மொத்தம் உள்ள இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏழாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன .இலங்கையில் கோவாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாஸ்கோநகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது :-
இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்ற பின்னர் களத்தில் உள்ள கருத்துக்கணிப்பில் நாம் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் எனத் தெரிகிறது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் கோவா அரசு 100% வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரைலர் தான் .நமது அடுத்த அரசில் இன்னும் நிறைய பணிகள் செய்யப்பட உள்ளன.
மீனவர்கள் குறித்து காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் மீன்வளத்துறை அமைச்சரவையை உருவாக்கினேன். மீனவர்களுக்கான காப்பீட்டை மேலும் அதிகரிப்பேன். கோவாவில் உள்ள விளையாட்டு ரசிகர்களுக்கு நான் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன் .அது என்னவென்றால் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற உங்கள் கனவை நாங்கள் நினைவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
SOURCE :Dinasangu