Kathir News
Begin typing your search above and press return to search.

தடைகளைத் தாண்டி தமிழக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவோம் - பிரதமர் மோடி!

தடைகளைத் தாண்டி தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியே தீருவோம் என்று தூத்துக்குடியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி உறுதி கூறினார்.

தடைகளைத் தாண்டி தமிழக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவோம் - பிரதமர் மோடி!

KarthigaBy : Karthiga

  |  29 Feb 2024 5:15 PM GMT

தூத்துக்குடி வ.உ.சி துறைமுக வளாகத்தில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


தமிழ்நாடு தூத்துக்குடியின் வளர்ச்சி மூலம் புதிய அத்தியாயத்தை எழுதி கொண்டு இருக்கிறது. பல திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. இந்த திட்டங்கள் தூத்துக்குடியில் இருக்கலாம் .ஆனால் இந்தியாவின் பல இடங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் .வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாடு செல்கிறது. இதற்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு அதிகமாக மகத்துவம் வாய்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கோவை வந்த போது வ. உ. சி துறைமுகம் சரக்குகள் கையாளும் திறனை அதிகரிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தேன். இந்த துறைமுகத்தை கப்பல் போக்குவரத்தில் பெரிய மையமாக மாற்றியே தீர்வேன் என்று வாக்களித்து சென்றேன். இன்று அந்த உத்தரவாதம் நிறைவேறி இருக்கிறது.


வ.உ.சி துறைமுகம் வெளி துறைமுக சரக்குபெட்டக முனையத்துக்காக வெகுகாலமாக காத்திருக்கிறது .இன்று அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த ஒரு திட்டத்திற்கு மட்டும் ரூபாய் 7000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. ரூபாய் 900 கோடி மதிப்பிலான பல திட்டங்களும் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர பல்வேறு துறைமுகங்களில் கிட்டத்தட்ட ரூபாய் 2500 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் .இன்று ஒரு கசப்பான உண்மையை உங்கள் முன்பு வைக்க விரும்புகிறேன். உண்மை கசப்பாக இருக்கலாம் .ஆனால் அதன் உண்மை தன்மையை மிகவும் சத்தியமானது. நான் நேரடியாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது குற்றச்சாட்டை வைக்கிறேன். இப்போது அறிஞர் கொண்டிருக்கும் நல்ல திட்டங்கள் பல ஆண்டுகள் கோரிக்கைகளாக மட்டுமே இருந்தன.


ஆனால் இன்று உங்கள் பிரதம சேவகன் ஆன நான் உங்கள் கனவுகளை நனவாக்க முன்பு வந்துள்ளேன். ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் பயணிகள் படகு தொடங்கப்பட்டுள்ளது. காசி கங்கையாற்றின் மீது இந்த படகு வெகு விரைவில் பயணத்தை தொடங்க உள்ளது. கங்கை ஆற்றில் இந்த படகு பயணிக்க தொடங்கும்போது தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே இருக்கக்கூடிய நான் பார்த்து அனுபவித்த அந்த நல்ல உறவு மேலும் ஆழப்படும். இது என்னுடைய தொகுதி மக்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் அளிக்கும் நன்கொடை .வ. உ சி துறைமுகத்தில் உப்புநீரை குடிநீராக மாற்ற மாலை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மட்டுமின்றி தமிழ்நாடு பசுமையாக்கள் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான ஒரு மிகப்பெரிய மையமாக மாறும் .


நான் ஒரு விஷயத்தை உங்கள் முன்பாக வைக்க விரும்புகிறேன். நான் இங்கு உரையாற்றுவது உங்களிடம் தெரிவிக்கும் கருத்துக்கள் யாவும் ஒரு அரசியல் கட்சியின் சித்தாந்தமும் என்னுடைய தனிப்பட்ட சித்தாந்தமோ கோட்பாடு கிடையாது. இந்த வளர்ச்சியே முன்னேற்றத்திற்கான கோட்பாடு. நான் இதை இங்கே கூறும் போது இங்கு இருக்கும் அரசாங்கம் அவற்றை பிரசரிக்க விடாமல் தடுத்து விடுவார்கள். இந்த தடைகளை எல்லாம் தாண்டி தமிழ்நாடு வளர்ச்சி பயணத்தை வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும். தமிழ்நாட்டுக்கும் தென் மாவட்டத்திற்கும் மிகப்பெரிய வளர்ச்சி கிடைத்து வருகிறது .தமிழ்நாட்டில் மூன்று பெரும் துறைமுகங்கள் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களும் உள்ளன. நான் உங்களுக்கு ஒரு உத்திரவாதத்தை அளிக்க விரும்புகிறேன். மூன்றாவது முறையாக நான் மறுபடியும் மாற்றி அமைக்கும் போது இந்த உத்திரவாதத்தை நான் நிறைவேற்றியே தீருவேன். இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் நிறைய பலத்தோடு முயற்சி செய்வோம். தமிழ்நாட்டு மக்களுக்கு இது மோடி அளிக்கும் உத்தரவாதம் .நீங்கள் இப்போது வெளிப்படுத்தி இருக்கும் அன்பு பாசத்தை தமிழகம் முழுவதும் மக்கள் என் மீது காட்டினார்கள். நீங்கள் என் மீது கொண்டிருக்கும் இந்த சகோதர பாசத்தை அன்பை பல மடங்காக உங்களுக்கு கண்டிப்பாக திருப்பி தருவேன் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன் .இவர் அவர் உணர்ச்சி பொங்க பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News