Kathir News
Begin typing your search above and press return to search.

சீனா, அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிப்பு மாநிலங்களை உஷார் படுத்தி கடிதம் - உடனடி நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு!

சீனா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி மத்திய சுகாதார மந்திரி ம மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். மாநிலங்களை உஷார் படுத்தி ஒரு கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

சீனா, அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிப்பு மாநிலங்களை உஷார் படுத்தி கடிதம் - உடனடி நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு!

KarthigaBy : Karthiga

  |  21 Dec 2022 9:30 AM GMT

சீனாவில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். அந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- புதிதாக தோன்றுகிற கொரோனா வைரஸ் திரிபுகளை கண்டறிய வேண்டும். இதற்காக கொரோனோ நேர்மறை சோதனை செய்யப்படுபவர்களின் மாதிரிகளை சேகரித்து, மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு உட்படுத்துவதை முடுக்கி விட வேண்டும். கொரோனா உறுதி செய்யப்படுபவரின் மாதிரிகளை தினமும் மரபணு வரிசைப்படுத்துதல், சோதனைக்காக அவற்றிற்காக அமைக்கப்பட்டுள்ள 'இன் சாகாக்' ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


இந்தியாவில் 5 அடுக்கு உற்பத்தியை பின்பற்றி வருவதால் நமது நாட்டில் கொரோனோ வாராந்திர பாதிப்பு 1200 என்ற அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் வாராந்திர பாதிப்பு 35 லட்சம் என்ற அளவுக்கு இருந்து வருகிறது. எனவே பொது சுகாதார சவால் நீடிக்கிறது. எனவே கொரோனா வைரஸ் திரிபுகளை கண்காணிக்க வேண்டியது மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News