Kathir News
Begin typing your search above and press return to search.

கடும் வெள்ளப்பெருக்கால் உரு குலைந்து போன போன லிபியா- உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தி மனதை உருக்கும் அவலம்!

லிபியாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக பலியானாரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது.ஒரே குழியில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்படுகிறது.

கடும் வெள்ளப்பெருக்கால் உரு குலைந்து போன  போன லிபியா- உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தி மனதை உருக்கும் அவலம்!

KarthigaBy : Karthiga

  |  15 Sep 2023 5:00 PM GMT

மத்திய தரை கடலில் உருவான டேனியல் புயலானது துருக்கி, கிரேக்கம், பல்கேரியா என பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் இந்த புயல் கோர தாண்டவம் ஆடியது. இதில் லிபியாவின் டெர்னா, சூசா, மார்ஜ் ஆகிய நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள பல அணைகள் நிரம்பி வழிந்தன.


இதில் சில அணைகள் உடைந்து சுனாமி போல தண்ணீர் வெளியேறியது. இதனை அடுத்து பேரிடர் மீட்பு பணியினர் களத்தில் இறங்கினர். அவர்கள் சுமார் 30000 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். எனினும் இந்த வெள்ளப் பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டு இதுவரை ஐந்தாயிரத்து நூறு பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 9 ஆயிரம் பேர் மாயமானதாக கூறப்படுகிறது . ஏற்கனவே உள்நாட்டு அரசியல் குழப்பத்தால் அங்கு மீட்புபணி நடைபெறுவது சவாலாக உள்ளது.


மேலும் வெளிநாட்டினரின் நிவாரண உதவிகள் பாதிக்க பட்டவர்களுக்கு செல்வதிலும் பல சிக்கல்கள் இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன . உடைந்த அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் நேரடியாக அங்குள்ள கடலில் கலந்து வருகிறது. இதன் காரணம் காரணமாக கடலில் கொத்து கொத்தாக மனித உடல்கள் மீட்கப்பட்டு வருவதாக மீட்பு படையினர் வேதனையுடன் தெரிவித்தனர் . அதேபோல் வெள்ளத்தால் உருகலைந்த டெர்னா நகரில் எங்கு பார்த்தாலும் மனித உடல்களாக காணப்படுகிறது. இந்த சம்பவம் லிபியாவை மட்டுமின்றி உலக நாடுகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


SOURCE : DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News