அடுத்து என்ன நடக்க போகிறது.? இன்று காலை முதல் தமிழகம் முழுக்க முற்றிலுமாக தடைபட்ட பேருந்து போக்குவரத்து!
அடுத்து என்ன நடக்க போகிறது.? இன்று காலை முதல் தமிழகம் முழுக்க முற்றிலுமாக தடைபட்ட பேருந்து போக்குவரத்து!

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளே இருக்கும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான பேருந்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லாக்டவுன் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் முழு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களில் எப்போதும் போல தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 5 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பழைய தளர்வுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை தளர்த்தும் விதமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மண்டல அளவிலான போக்குவரத்து கடந்த மாதம் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது. சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், மாவட்ட அளவிலான போக்குவரத்துக்கு மட்டும் கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.
முன்பு மண்டலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது மாவட்டங்களுக்கு உள்ளேயே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. தனியார் பேருந்துகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தும்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து இன்று முதல் 15ந் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் எப்பகுதியிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.