எனக்கு ஆளும் கட்சியினரால் உயிருக்கு ஆபத்து - மதுரை ஆதீனத்தின் பரபரப்பு பேட்டி!
தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியினால் என் உயிருக்கு பாதிப்பு உள்ளது அதன் காரணமாக பிரதமரை சந்திப்பேன் பரபரப்பு பேட்டி.
By : Bharathi Latha
தற்போது உள்ள ஆளும் கட்சியின் முடிவான மனிதனை மனிதன் சுமக்கக் கூடாது என்ற கோரிக்கையும் பெயரில் சமீபத்தில் நடந்த தர்மபுரம் ஆதீன மடத்தின் பட்டினப்பிரவேசம் விழாவில் பல்லாக்கு நிகழ்ச்சிக்கு திராவிட கழகத்தின் கோரிக்கையின் பேரில் அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்பினர், ஆன்மீகவாதிகள், பக்தர்கள் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறுகையில், "நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன் உயிரே போனாலும் பரவாயில்லை" என்று தெரிவித்திருந்தார்.
மேலும் ஆளுநர் வர காரணமாகத் தான் தருமபுர ஆதீன மடத்துக்கு பிரவேச விழா ரத்து ஆனதற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தில் பட்டின பிரதேசத்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் முதல்வர் அவர்களை நேரில் வந்த தலைமை தாங்கி இந்த விழாவை நடத்த வேண்டும் என்றும் இதை இந்த விழாவை நடத்த அரசாங்கம் முழு அனுமதி தரவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.
மேலும் சட்டமன்றப் பேரவையில் நடந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இது பற்றிக் கூறுகையில், பாரம்பரியமாக நடந்து வரும் தர்மபுரம் ஆதீனத்தை பல்லாக்கில் தூக்குவதற்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என பேசினார். மேலும் இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் கூறுகையில் இது தொடர்பான முக்கிய முடிவை முதலமைச்சர் பார்வையின் கீழ் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார் வரும் மே 22ஆம் தேதிக்குள் இதற்கான முடிவு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
Input & Image courtesy:Twitter source