இருள் நகரமாக காட்சி அளிக்கும் தூங்கா நகரம் - டெண்டர் விடுவதில் ஏற்படும் தாமதம்!
ஆட்சி மாற்றம் காரணமாக தெருவிளக்குகளுக்கான டெண்டர் பிடிப்பதில் ஏற்பட்ட தாமதம்.
By : Bharathi Latha
மதுரை என்றால் எப்பொழுதுமே ஒளிவீசும் நகரமாக, மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் தூங்கா நகரமாக காட்சியளிக்கும். ஆனால் தற்போது கடந்த சில மாதங்களாகவே இருளில் மூழ்கி காட்சி அளிக்கிறது இந்த நகரம். மதுரையில் சுமார் 100க்கும் மேற்பட்ட வார்டுகள் மற்றும் 55,000 மேற்பட்ட தெருவிளக்குகள் மதுரை மாநகராட்சியில் இருந்து வருகிறது. தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் அதிக அளவில் தேவைப்படுவதால் கடந்த ஆண்டு முதல் LED பல்புகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இந்த பல்புகளின் பராமரிப்பு பணி தற்போது வரை நடைபெறவில்லை. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் இல்லாமல் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.
கடந்த ஆட்சியின் போது விடப்பட்ட டெண்டர் காலம் இந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் புதிய டெண்டர் விடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் புதிய மாநகராட்சி மற்றும் பல்வேறு காரணங்களால் இதை தாமதப்படுத்தி உள்ளார்கள். இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் 50 சதவீதத்திற்கு அதிகமாக தெருவிளக்குகள் பராமரிப்பின்றி இருக்கின்றது. எப்பொழுதும் ஒளி நகரமாக காணப்படும் தூங்கா நகரம் இன்று இருளில் நகரமாக மாறி, இருட்டில் மூழ்கி இருக்கிறது.
இதனால் பெண்கள் இரவில் வெளியில் நடமாட்டத்தை குறைந்து வருகிறார்கள். இதுபற்றி மதுரை நகர மக்கள் கூறுகையில், "பலமுறை அதிகாரிகளுக்கு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த ஒரு கோரிக்கையும் எடுத்துக் கொள்ளப் பட்டதாக தெரியவில்லை. தெருவிளக்கு இல்லாததால் பெண்கள் குழந்தைகள் தெருவில் நடமாடுவது முற்றிலுமாக குறைக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை போன்ற தீய சம்பவங்களுக்கு இத்தகைய தெருவிளக்குகள் இல்லாதது மிகப்பெரிய சாதகமாக போய்விட்டது" என்று பல்வேறு மக்கள் புலம்புகிறார்கள்.
Input & Image courtesy: News