Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சி உஜ்ஜீவநாதர் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்காதது ஏன் - மதுரை ஐகோர்ட் கேள்வி

திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மலையில் உள்ள உஜ்ஜீவநாதர் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து நீட் கதையை நின்று மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது

திருச்சி உஜ்ஜீவநாதர் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்காதது ஏன் - மதுரை ஐகோர்ட் கேள்வி

KarthigaBy : Karthiga

  |  20 Oct 2022 10:15 AM GMT

திருச்சி மாவட்டம் இடைமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த சாவித்திரி துரைசாமி மதுரை ஐகோர்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் தீவிர சிவ பக்தை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களுக்கு சென்று வந்துள்ளேன். தொன்மையான ஆதீன மடங்களில் தர்மபுர ஆதீனமும் ஒன்று. தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றுவதில் தருமபுர ஆதீனம் முக்கிய இடம் பிடித்தது. இதன் கீழ் ஏராளமான கோவில்களும் நிலங்கள் உட்பட சொத்துக்களும் உள்ளன. இதன்படி திருச்சி உய்யக் கொண்டான் உஜ்ஜீவநாதர் கோவிலும், தர்மபுரம் ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ளது.இந்த கோவிலுக்கு வலது புறம் உள்ள சுமார் ஐந்து ஏக்கர் நிலம் தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தில் தனி நபர்கள் பலர் ஆக்கிரமித்துள்ளனர். இது சம்பந்தமாக கீழ் கோர்ட்டில் நடந்த வழக்கில் அந்த நிலம் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் அந்த நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்படவில்லை. இப்படியே விட்டுவிட்டால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்டு காணாமல் போகும் நிலை ஏற்படும்.


இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் பலன் இல்லை. எனவே உய்யக் கொண்டான் மலையில் உள்ள திருக்கார்குடி உஜ்ஜீவநாதர் கோவில் நிலத்தை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன்,சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்த ஆவணங்களை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார். அவற்றைப் பெற்ற நீதிபதிகள் பல கோடி ரூபாய் மதிப்படைய கோவில் நிலத்திலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். பின்னர் ஆக்கிரமிப்பு விவரங்களை விரிவான அறிக்கையாக இந்த ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 26 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News