பெண்களை ஏமாற்றுவதை தொழிலாக செய்த மதுரை மைனரை 'அமுக்கிய' போலீஸ் - தாயும் உடந்தை என பகீர் தகவல்
மதுரையில் மாணவிகளிடம் பழகி பணம் பறிப்பதை தொழிலாக வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
By : Mohan Raj
மதுரையில் மாணவிகளிடம் பழகி பணம் பறிப்பதை தொழிலாக வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை ஐயர் பங்களா உற்சபரம்பு மேடு பாமா நகரை சேர்ந்தவர் சந்துரு. இவர் முத்துப்பட்டியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி மூலம் அவரது தோழியை சந்துரு காதலித்தார். சில மாதங்களுக்கு முன்பு மாணவியை சந்தித்த சந்துரு உன் தோழி என்னை ஏமாற்றி விட்டாள் என நாடகமாடினார்.
இதை நம்பி சந்துரு'விடம் ஆறுதல் கூற அவரிடம் காதல் வலையை வீசி உள்ளார். அவரை முழுமையாக மாணவி நம்பியதால் கேட்கும் போதெல்லாம் பெற்றோருக்கு தெரியாமல் ஒரு லட்சம் ரூபாய், 14 சவரன் நகைகளை கொடுத்துள்ளார். அத்தனை பணமும், நகையும் தான் கைக்கு வந்த பிறகு அந்த காதல் வலையை மாணவியின் மற்றொரு தோழிக்கு சந்துரு வீசி உள்ளார்.
இது குறித்து மாணவியிடம் தோழி கூற அப்போதுதான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகனிடம் பெற்றோர் புகார் செய்த நிலையில் பள்ளி கல்லூரி மாணவியிடம் நட்பாகப் பழகி நகை பணத்தை பறிப்பதை சந்துரு தொழிலாகவே கொண்டிருந்ததும் இதற்கு அவர்கள் தாயாரும் உடந்தையும் இருந்துள்ளாக தெரியவந்துள்ளது.
சைக்காலஜி படித்துள்ளதால் எளிதாக மாணவியின் மனதை தன் வசப்படுத்தி உள்ளார். அவரது மொபைல் ஃபோனை ஆய்வு செய்தபோது மேலும் இரு பெண்களிடம் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்துள்ளது கைதான சந்துருவிடம் போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.