வள்ளுவர் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற அரசாணை கிடையாது - மாஃபா பாண்டியராஜன்
வள்ளுவர் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற அரசாணை கிடையாது - மாஃபா பாண்டியராஜன்
By : Kathir Webdesk
பாஜக கட்சி தனது டிவிட்டில் திருவள்ளுவர் காவி உடை அணிந்தது போல் புகைப்படத்தை பகிர்ந்தது, இது தமிழகம் முழுக்க பெரிய பேசும் பொருளாக இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடியால் தமிழின் புகழ் உலகம் எங்கும் ஒலிக்கிறது. தமிழை கொண்டாடுவதை நாங்கள் வரவேற்கிறோம்.
திருக்குறளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. பிரிட்டிஷ் அரசுதான் திருவள்ளுவரை சமண துறவியுடன் ஒப்பிட்டனர். வள்ளுவரை இந்துமதம் சார்ந்தவர் என்று கூறுவது அவர் அவர்களின் விருப்பம். வள்ளுவரை யார் எப்படி வேண்டுமானாலும் வரையலாம். வள்ளுவர் இப்படிதான் இருக்க வேண்டும் என்று அரசாணை எதுவும் கிடையாது. அவரை இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.தமிழ் தற்போது தரணி எங்கும் ஒலிக்கிறது.
இறை நம்பிக்கை உடையவர்களின் கட்சி அதிமுக. கடவுள் வாழ்த்து எழுதியவர் திருவள்ளுவர்.அவர் தெய்வப்புலவராக இருக்கவே வாய்ப்புள்ளதே தவிர நாத்திகராக இருக்க வாய்ப்பில்லை, என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.