Kathir News
Begin typing your search above and press return to search.

மகாராஷ்டிரா : கொரானா வார்டில் இருந்து காணாமல் போன மூதாட்டி, எட்டு நாட்களுக்கு பிறகு கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட அவலம்.! #Maharashtra

மகாராஷ்டிரா : கொரானா வார்டில் இருந்து காணாமல் போன மூதாட்டி, எட்டு நாட்களுக்கு பிறகு கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட அவலம்.! #Maharashtra

மகாராஷ்டிரா : கொரானா வார்டில் இருந்து காணாமல் போன மூதாட்டி, எட்டு நாட்களுக்கு பிறகு கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட அவலம்.!  #Maharashtra

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jun 2020 2:16 AM GMT

மனதைப் பதற வைக்கும் ஒரு சம்பவத்தில், மகாராஷ்டிராவின் ஜல்கானில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து எட்டு நாட்களாக காணாமல் போன பூசவலைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி, புதன்கிழமை (ஜூன் 10) அதே மருத்துவமனையில் கழிப்பறைக்குள் இறந்து கிடந்தார் என்று போலீஸ் அதிகாரிகளும் அவரது உறவினர்களும் கூறுகிறார்கள்.

ஜிலாபெத் காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் அக்பர் படேல் கூறுகையில், ஜல்கான் சிவில் மருத்துவமனை (JCH) அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் ஜூன் 2 ஆம் தேதி அவர் காணவில்லை என்று போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

"அதன்பிறகு, நாங்கள் பூசாவலில் முழு விசாரணைகளை மேற்கொண்டோம், உறவினர்கள் முன்னிலையில் அனைத்து நோயாளி பதிவுகளையும் சரிபார்த்தோம், சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை ஸ்கேன் செய்தோம், பின்னர் ஜூன் 6 அன்று புகாரை பதிவு செய்தோம்" என்று படேல் கூறுகிறார்.

அந்த மூதாட்டி மே 27 அன்று கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தார். மேலும் அவர் JCH-க்கு மாற்றப்படுவதற்கு முன்பு வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனால் விசாரணைக்கு போலீஸ் குழுக்கள் அங்கும் அனுப்பப்பட்டன.

ஜூன் 2 ஆம் தேதி வரை அவர் வார்டில் காணப்பட்டதை JCH அதிகாரிகள் உறுதிப்படுத்தினர், அதன் பிறகு அந்தப் பெண் இருக்கும் இடம் தெரியவில்லை.

"இறுதியாக, இன்று, மருத்துவமனையின் கழிப்பறை ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. திறந்து பார்த்தால் அந்த பெண்ணின் உடலை நாங்கள் கண்டோம். பிறகு நாங்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளோம்" என்று படேல் கூறினார்.

ஒரு வீடியோ செய்தியில், அவரது மனமுடைந்த பேரன் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடவும், அலட்சியமாக நடந்து கொண்டு இதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களில் 'காணாமல் போன' கோவிட் -19 நோயாளி இறந்து கிடந்த இரண்டாவது நிகழ்வு இது. செவ்வாயன்று, மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், காண்டிவலியில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சதாப்தி மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன 80 வயது ஆண் கோவிட் -19 நோயாளியின் சடலம் போரிவாலி நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மாநில பாரதிய ஜனதா (BJP) துணைத் தலைவர் கிரித் சோமையா இதுபோன்ற சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News