அஞ்சலக சேமிப்பு கணக்குகள்... பெண்களுக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா...
மகளிர்க்க அதிகாரம் அளிப்பதற்காக மத்திய அரசு அஞ்சலக சேமிப்பு கணக்குகளை தொடங்கியிருக்கிறது.
By : Bharathi Latha
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் சன்சத் மார்க் தலைமை அஞ்சல் அலுவலகம் சென்று மகளிர் நல சேமிப்புக் கணக்கை தொடங்கினார். அவருக்கான கணக்கு தொடங்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுப் புத்தகம் அவரிடம் வழங்கப்பட்டது.
அப்போது அஞ்சல் அலுவலக ஊழியர்கள், மகளிர் நல சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குதாரர்கள் ஆகியோரிடம் அவர் உரையாற்றினார். சிறுமிகள் உட்பட மகளிருக்கு அதிகாரமளிக்கும் வகையில், விடுதலை அமிர்தப் பெருவிழாவின் நினைவாக 2023-24-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மகளிர் நல சேமிப்புத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
ஏழை மக்கள் குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்தை பெரும்பளவில் உயர்த்துவதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் தொடர்ச்சியான வகையில் செய்து கொண்டு வருகிறது. குறிப்பாக அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக தொடங்கப்படும் இத்தகைய சிறுசேமிப்பு கணக்குகள் பிற்காலத்தில் பெரிய தொகைகளை மகளிர்க்கு வழங்குகிறது.
Input & Image courtesy: News