Kathir News
Begin typing your search above and press return to search.

எவையெல்லாம் முக்கியமான பொருட்கள், துறைகள்? சுயசார்பு நிலையை எட்ட அசோசெம் அமைப்பின் பரிந்துரைகள்.! #MakeInIndia #AtmaNirbarBharat #SelfReliance #Manufacturing

எவையெல்லாம் முக்கியமான பொருட்கள், துறைகள்? சுயசார்பு நிலையை எட்ட அசோசெம் அமைப்பின் பரிந்துரைகள்.! #MakeInIndia #AtmaNirbarBharat #SelfReliance #Manufacturing

எவையெல்லாம் முக்கியமான பொருட்கள், துறைகள்? சுயசார்பு நிலையை எட்ட அசோசெம் அமைப்பின் பரிந்துரைகள்.! #MakeInIndia #AtmaNirbarBharat #SelfReliance #Manufacturing

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 July 2020 1:48 AM GMT

பிரதமர் நரேந்திர மோடியின்‌ சுயசார்பு பாரதத்தை நிறுவுவதற்கான அழைப்பை அடுத்து முன்னெப்போதையும் விட இப்போது இந்தியாவில் படைப்பாற்றலை ஊக்குவித்து உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் ஆர்வம் அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளது. இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தொழில் துறை அமைப்பான அசோசெம் அடுத்த 2,3 ஆண்டுகளில் அதிகபட்ச சுய சார்பு நிலையை அடைய உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டிய 15 முக்கியமான இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தெரிவு செய்துள்ளது.

சமீபத்திய தரவுகளை ஆய்வு செய்தபோது கச்சா எண்ணெய் தவிர்த்து மின்னணு பொருட்கள்தான் தான் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது என்று அசோசெம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் கூட இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் 2.8 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

'தொழிற்சாலைகள் எப்போதும் போல் இயங்கும் நிலையில் இந்த பொருட்கள் ஒரு மாதத்திற்கு 5 பில்லியன் டாலர் என்ற அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இது இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பை பெருமளவில் பாதிக்கிறது. எனவே இதை குறைப்பது அவசியம்' என்று அசோசெமின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அசோசெமின் பொதுச் செயலாளர் தீபக் சூட் கூறுகையில், "கச்சா எண்ணெயை நம்பி இருப்பதை குறைக்க நீண்டகால திட்டமிடல் தேவைப்படும் நிலையில் குறைந்தபட்சம் மிக முக்கியமான 15 துறைகளில் நாம் சுயசார்பு நிலையை அடைவது மிக முக்கியம். உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக அதிகம் முதலீடு செய்வதோடு வாடிக்கையாளர்கள் இருப்பதிலேயே தரமான பொருட்களை சர்வதேச அளவில் கிடைக்கும் மலிவான விலைக்கு வாங்க கூடிய நிலையையும் ஏற்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் சுயசார்பு என்பது அபரிமிதமான உற்பத்தி மற்றும் உற்பத்தி செம்யப்படும் அளவு, எவ்வளவு விரைவாக உற்பத்தி செய்யப்படுகிறது என்பதன் அடிப்படையில் விலை நிர்ணயம் ஆதியவற்றைப் பொறுத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

மின்னணு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் உற்பத்தி சார்ந்த உதவித் தொகை வழங்கும் திட்டங்கள் தற்போது இருக்கும் நிலையை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் இதைத் தீவிரமாகப் பின்பற்றினால் இந்த துறையின் தலையெழுத்தையே கூட மாற்றலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். எனினும் சுயசார்பு நிலையை அடைய உள்நாட்டு மற்றும் அந்நிய நேரடி முதலீடு ஆகிய இரண்டுமே ஊக்குவிக்கப்பட‌ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பார்மசூடிக்கல் துறைக்கு தேவைப்படும் இடைநிலைப் பொருட்கள், டெக்ஸ்டைல் துறைக்கு நூல், உரங்கள், மரம் மற்றும் மரச்சாமான்கள், போக்குவரத்து உபகரணங்கள், இயந்திரக் கருவிகள், மின் இயந்திரங்கள் ஆகியவை பிற முக்கியமான அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பட்டியலில் வருகின்றன என்று குறிப்பிட்டுள்ள அசோசெம் அறிக்கை அடுத்த சில ஆண்டுகளில் இந்த அனைத்து பொருட்களையும் இந்தியாவிலேயே தயாரித்து சுயசார்பு நிலையை அடையும் திறன் நமக்கு இருக்கிறது என்று உறுதியளித்துள்ளது.

நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் தனியாரை அனுமதிக்கும் அண்மைக் கால முடிவு நிலக்கரிக்காக இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்க உதவியாக இருக்கும் என்றும் உபயோகமற்ற குப்பைகளை‌ இந்தியாவில் கொட்டும் செயல்பாட்டின் மேல் கடுமையான நடவடிக்கை எடுப்பது மற்றும் உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் மாதா மாதம் 3 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு, ஸ்டீல் மற்றும் இரும்பு அல்லாத உலோகங்களின் இறக்குமதியை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்க முடியும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வேதிப் பொருட்கள், செயற்கை பிசின்கள், பிளாஸ்டிக் இவையனைத்தும் கிட்டத்தட்ட 3.5 பில்லியன் டாலர் ‌அளவுக்கு ஒவ்வொரு மாதமும் இறக்குமதி செய்யப்படுகின்றன. விவசாயப் பொருட்களை எடுத்துக் கொண்டால் தாவர எண்ணெய்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டும் ஒரு‌‌ மாதத்திற்கு 1 பில்லியன் டாலர் அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

கோதுமை மற்றும் அரிசியையே அதிகம் நம்பி இருக்கும் விவசாயிகளை எண்ணெய் வித்துக்களின் பக்கம் திருப்பினால் ஒரு சில பருவங்களிலேயே விவசாய பொருட்களின் இறக்குமதியைக் குறைக்கலாம் என்று அசோசெம் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

நன்றி : ஸ்வராஜ்யா

Next Story
கதிர் தொகுப்பு
Trending News