Kathir News
Begin typing your search above and press return to search.

மாமல்லபுரம் அழகும், மலைக்க வைக்கும் தமிழர்களின் விருந்தோம்பல் குணமும் மறக்க முடியாதவை! தமிழகம் குறித்து சீன அதிபர் பெருமிதம்!!

மாமல்லபுரம் அழகும், மலைக்க வைக்கும் தமிழர்களின் விருந்தோம்பல் குணமும் மறக்க முடியாதவை! தமிழகம் குறித்து சீன அதிபர் பெருமிதம்!!

மாமல்லபுரம் அழகும், மலைக்க வைக்கும் தமிழர்களின் விருந்தோம்பல் குணமும் மறக்க முடியாதவை! தமிழகம் குறித்து சீன அதிபர் பெருமிதம்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Oct 2019 9:16 AM GMT


மாமல்லபுரம் அருகே உள்ள கோவளம் தாஜ் ஓட்டலில் நடந்த இந்தியா- சீன அதிகாரிகள் கூட்டத்தில் சீன தேச அதிபர் ஜின்பிங் கூறியதாவது:-


இந்தியா வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழகத்தில் எனக்கு அளிக்கப்பட வரவேற்பு மிகவும் சிறப்பானது. அதற்காக உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர்களின் உண்மையான அன்பை எங்களால் நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது.


இந்தியா-சீனா இடையேயான நல்லுறவு தற்போது மேம்பட்டு வருகிறது. இரு நாடுகளும் இது போன்ற பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அதற்காக சீனா எப்போதும் தயாராக காத்திருக்கிறது.


மாமல்லபுரம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத இடமாக மனதில் நிலைத்து உள்ளது. இனி ஒரு நாளும் மறக்க முடியாது. பல இனிமையான சம்பவங்களையும், ஞாபகங்களையும் மாமல்லபுரம் பயணம் எனக்கு தந்துள்ளது.


அதேபோல தமிழகத்தின் விருந்தோம்பல் என்னை நெகிழ வைத்து விட்டது. என்னுடன் வந்த அதிகாரிகளும் இதை உணர்ந்துள்ளனர் இதற்காக நான் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


பிரதமர் மோடியும், நானும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் நேற்றும், இன்றும் மனம்விட்டு பேசினோம். அது பயனுள்ளதாக இருந்தது. நாங்கள் தொடர்ந்து இரு நாடுகளின் உறவு மேம்பட பாடுபடுவோம்.


நாங்கள் இருவரும் மிக ஆழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் பேச்சு நடத்தி உள்ளோம். இந்த பேச்சு வார்த்தைகள் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சந்திப்பு நிச்சயம் அமையும்.


மாமல்லபுரத்தின் வருகை எனக்கு உண்மையிலேயே பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது. நிச்சயமாக இது ஒரு சீனா – இந்தியா இடையே புதிய நல்லுறவு தொடக்கமாக அமையும். இவ்வாறு சீன அதிபர் ஜின்பிங் பேசினார்.


Source:- Maalaimalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News