Kathir News
Begin typing your search above and press return to search.

மம்தா, சரத்பவார் கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன - ஆம் ஆத்மி தேசிய கட்சியானது

ஆம் ஆத்மியை தேசிய கட்சியாக தேர்தல் கமிஷன் அங்கீகரித்து உள்ளது. அதேநேரம் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளன.

மம்தா, சரத்பவார் கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன - ஆம் ஆத்மி தேசிய கட்சியானது

KarthigaBy : Karthiga

  |  11 April 2023 8:00 AM GMT

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கட்சி, முதலில் டெல்லியில் ஆட்சியைப் பிடித்த இந்த கட்சி படிப்படியாக பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கால் பதிக்க தொடங்கியது . இதில் அடுத்த மைல்கல்லாக கடந்த ஆண்டு நடந்த பஞ்சாப் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது . மேலும் கோவா, குஜராத் தேர்தல்களிலும் கணிசமான வாக்குகளையும் இடங்களையும் ஆம் ஆத்மி பெற்றது.


இதை தொடர்ந்து தேசியக் கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு அந்த கட்சி கடிதம் எழுதியது. இதை பரிசீலித்த தேர்தல் கமிஷன் ஆம்ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளது. டெல்லி, கோவா , பஞ்சாப் மற்றும் குஜராத் தேர்தல்களில் ஆம் ஆத்மியும் செயல்பாடுகளின் அடிப்படையில் அந்த கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.


அதே நேரம் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பா.ஜ.க காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,பகுஜன் சமாஜ், தேசிய மக்களின் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தற்போது தேசிய கட்சிகளாக உள்ளன.


குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் 6 சதவீத வாக்குகள் மற்றும் குறைந்த பட்சமாக 4 மக்களவை உறுப்பினர்களை பெற்ற ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராஷ்ட்டிரீய லோக் தளம், பாரதிய ராஷ்டிர சமிதி , பி.டி.ஏ., பா.ம.க புரட்சிகர சோசலிச கட்சி, எம்.பி.சி ஆகிய கட்சிகள் மாநில கட்சி அந்தஸ்தை இழந்து உள்ளன .


அதே நேரம் நாகாலாந்தில் திரிணாமுல் காங்கிரஸும் மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸும் மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதைப்போல் லோக்ஜன சக்தி கட்சி நாகாலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News