மதுரை கிறிஸ்தவ பள்ளியில் கட்டாய மத மாற்றம்! வகுப்பறையில் பிணமாக தொங்கிய மாணவி!!
மதுரை கிறிஸ்தவ பள்ளியில் கட்டாய மத மாற்றம்! வகுப்பறையில் பிணமாக தொங்கிய மாணவி!!
By : Kathir Webdesk
மதுரை கோ.புதூரில் உள்ளது லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இது அரசு உதவி பெறும் கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளியாகும். மற்ற கிறிஸ்தவ பள்ளிகளைப் போன்று இந்த பள்ளியிலும் கட்டாய மதமாற்றமும், கல்வியில் ஒர் அங்கம் போன்றே நடைபெற்று வருகிறது.
இங்கு பயிலும் மாணவிகள் பொட்டு வைக்க அனுமதிப்பதில்லை. இந்து மத சின்னங்களை அனமதிப்பதில்லை. இந்துக்களின் புனித கயிறுகள் கட்ட அனுமதிப்பதில்லை.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட இந்து முன்னணி சார்பாக 3 ஆண்டுகளுக்கு முன்பே, மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்ட்டுள்ளது. இருந்தும் அதிகாரிகளின் அலட்சியப் போக்காமல் இந்த பள்ளியில் கட்டாய மதமாற்றம் தொடர்ந்து நடக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 16 வயது அர்சனா என்ற 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவி மர்மமான முறையில் வகுப்பறையில் பிணமாக தொங்கியுள்ளார்.
மாணவி அர்ச்சனா, காலையில் முன்னதாகவே வந்து வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல போலீசார் வருவதற்கு முன்பே, மாணவி அர்ச்சனாவின் உடலை கீழே இறக்கி, பள்ளியை விட்டு எடுத்து செல்ல நிர்பந்தித்துள்ளது.
அர்ச்சனாவின் உறவினர்களும் உடனை இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். வழியில் போலீசார் வந்து உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மாணவி அர்ச்சனாவின் தந்தை முத்து, கட்டிட தொழிலாளி. கல்வியறிவு இல்லாதவர். எனவே அவரை மிக சாமர்த்தியமாக பள்ளி நிர்வாகம் மிரட்டி, போலீஸ் விசாரணைக்கு முன்பே பள்ளியின் வகுப்பறையில் மர்மமான முறையில் பிணமாக தொங்கிய அர்ச்சனாவின் உடலை வெளியேற்றியுள்ளது.
அதோடு அவர்களின் வக்கிர செயல்கள் முடிவுக்கு வரவில்லை. மாணவிகள் மட்டுமே பயிலும் இந்த பள்ளியில் படித்த மாணவி அர்ச்சனா, காதலித்து வந்ததாகவும், அந்த தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும் கதையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதற்காக காவல் துறை அதிகாரிகளுக்கும் கணிசமான அளவில் கரன்சியை வெட்டியுள்ளது பள்ளி நிர்வாகம்.
மாணவி அர்ச்சனா மரணத்தில் மர்மம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை மூடி மறைக்கவே அவசர அவசரமாக அர்ச்சா உடலை பள்ளியை விட்டு வெளியேற்றி உள்ளனர் என்று கூறுகின்றனர்.
மாணவியின் மரணத்தில் கட்டாய மதம் மாற்றம் முக்கிய காரணம் என்கின்றனர் அர்ச்சனாவின் உறவினர்கள். 4 ஆண்டுகளாகவே பள்ளிக்கு செல்லும்போது பொட்டு வைப்பதில்லை என்றும் ஆசிரியைகள் திட்டுவார்கள் என்றும் அர்ச்சனா கூறியதாக அவரது தாயார் சுந்தரி கூறினார். அர்ச்சனா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் 3 நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாகவும் அவர் கூறினார்.
அர்ச்சனாவின் மர்ம மரணம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, மதுரை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் கே.தங்கம் வெங்கடேஷ் கூறியதாவது:-
லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது, கிறிஸ்தவர்கள் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளியாகும். இங்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது என்றும், மத ரீதியான துன்புறுத்தல் நடக்கிறது என்றும் மதுரை மாவட்ட கல்வி அதிகாரியிடம் இந்து முன்னணி சார்பில் புகார் அளித்தோம்.
இங்கு படிக்கும் மாணவிகள் கத்தி முனையில் மத மாற்றம் செய்யப்படுகின்றனர். 11-ஆம் வகுப்பு மாணவி அர்ச்சனா 3 நாள் விடுப்பு எடுத்துவிட்டு சென்றது இறந்துள்ளதாக சொல்கிறார்கள். எதனால் அது நடந்தது? அர்ச்சனைவை அவர்கள் என்ன வார்த்தை சொன்னார்கள்? என்பது தெரியவில்லை.
இதன் உண்மையை வெளியே கொண்டு வருவதற்கு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இங்குள்ள காவல்துறை அதிகாரிகள் விசாரித்தால் நிச்சயமாக நீதி கிடைக்காது.
இதுபோன்ற கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் நடைபெறும் கட்டாய மதமாற்றம் தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அடங்கிய குழு அமைத்து, அந்தந்த பள்ளிகளில் கட்டாய மத மாற்ற முயற்சிகள் நடக்கிறதா என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்.
https://m.facebook.com/story.php?story_fbid=2595563030540062&id=100002591723431
இவ்வாறு அவர் கூறினார்.