கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் தீவிரவாதி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவள்!
கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் தீவிரவாதி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவள்!
By : Kathir Webdesk
கடந்த மாதம் 28-ஆம் தேதி கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள், மாணிக்கவாசகம், கார்த்தி, அரவிந்த் மற்றும் ரமா என்பது தெரியவந்தது. இவர்கள் நான்கு பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று கேரள போலீசார் அறிவித்தனர்.
இந்த நிலையில், கேரள போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் பெண் தீவிரவாதி ரமா, தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவள் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
ரமாவின் உண்மையான பெயர் அஜிதா. இவள் கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே உள்ள நிலப்பாறையை சேர்ந்தவள்.
அஜிதா, சிறுவயதாக இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டார். தாயார் பெயர் சொர்ணம். அஜிதாவை கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் படிக்க வைத்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ படித்துள்ளாள். அதன்பிறகு மேற்படிப்பிற்காக சென்னை சென்ற அவர், அங்கு படிப்பை தொடராமல் பாதியில் நிறுத்திவிட்டாள்.
அதன் பிறகு 2014-ஆம் ஆண்டு மதுரை சட்டக்கல்லூரியில் மீண்டும் படிப்பை தொடர்ந்து உள்ளாள். அப்போதுதான் அவனுக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் உள்ள கம்யூனிஸ்ட் தீவிரவாதிகள் மூலம் இந்த தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாவோயிஸ்டு தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து தானும் ஒரு தீவிரவாதியாக செயல்பட்டு வந்துள்ளார். அவள் தனது அடையாளத்தை மறைப்பதற்காக அஜிதா என்ற தனது பெயரை ரமா என்று மாற்றி அந்த பெயரில் இயங்கி வந்துள்ளாள்.
இந்த நிலையில்தான் கடந்த மாதம் கேரளாவில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளாள்.
அஜிதாவை மாவோயிஸ்ட் தீவிரவாத கும்பல் களுடன் இணைத்த தமிழகத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் தீவிரவாதிகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுவரை கன்னியாகுமரி மாவட்டம், தீவிரவாத செயல்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இந்த மாவட்டத்தில் இருந்து ஒரு பெண் மாவோயிஸ்ட் தீவிரவாதியாக உருவெடுத்திருப்பது மாவட்ட மக்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுஜாதாவைப் போன்று வேறு யாரேனும், மாவோயிஸ்ட் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.