அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கார்ப்பரேட் வரி குறைப்பு அறிவிப்பால் கார்களின் விலையை குறைத்தது மாருதி சுசுகி!
அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கார்ப்பரேட் வரி குறைப்பு அறிவிப்பால் கார்களின் விலையை குறைத்தது மாருதி சுசுகி!
By : Kathir Webdesk
சமீப காலமாக கார்கள் மற்றும் பயணியகள் வாகன விற்பனை சரிந்தது வருகிறது. வாகன விற்பனையை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு கார் நிறுவனங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதன் பிறகு கார்ப்பரேட் வரியை மத்திய நிதி அமைச்சகம் குறைத்தது.
இது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமானங்கள் செலுத்தும் கார்ப்பரேட் வரியை 34.9 சதவிகிதத்தில் இருந்து 25.2 சதவிகிதமாக குறைத்து அறிவித்தார். இதன் காரணமாக அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி குறையும்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, கார்களின் விலையை குறைக்க மாருதி சுசூகி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இறுதியாக முன்னணி மாடல் கார்களின் விலையை குறைப்பதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாருதி ஆல்டோவில் தொடங்கி, எஸ்-கிராஸ் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாடல் கார்களுக்கும் ஷோ ரூம் விலையில் இருந்து, 5000 ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கார்பரேட் வரி குறைப்பை தொடர்ந்து வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலை குறைப்பு மேற்கொள்ள முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.