Kathir News
Begin typing your search above and press return to search.

நண்பர்களுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றதால் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹிந்து மத வெறுப்பு

நண்பர்களுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றதால் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹிந்து மத வெறுப்பு

நண்பர்களுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றதால் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹிந்து மத வெறுப்பு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 July 2019 6:29 PM GMT


சபரிமலை விவகாரத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நின்று, சபரிமலையின் புனிதத்தை கெடுக்க அரும்பாடுபட்டது, கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி. ஹிந்து மத வெறுப்பில் திளைத்த அந்த கட்சிக்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்டினர் கேரள மக்கள். இருந்தாலும், கேரள கம்யூனிஸ்ட்டுகளின் ஹிந்து மத வெறுப்பு சற்றும் குறையவில்லை போல் தெரிகிறது.


கட்சியிடம் முன் அனுமதி பெறாமல் நண்பர்களுடன் கர்நாடகா மாநிலம் மூகாம்பிகா கோயிலுக்கு சென்றதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நிர்வாகி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருவனந்தபுரம் அருகே வெள்ளறடை பகுதியைச் சேர்ந்தவர் பேபி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெள்ளறடை வட்டார செயலாளராக உள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி இவர் தனது நண்பர்களுடன் கர்நாடகா மாநிலம் மூகாம்பிகா கோயிலுக்கு சென்றுள்ளார். இதற்காக பேபி கட்சியில் இருந்து முன் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கோயிலில் இவர் நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்கள் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானது. கடந்த 2 நாட்களுக்கு முன் வெள்ளறடை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.


அப்போது கட்சியின் முன் அனுமதி பெறாமல் கர்நாடகா மூகாம்பிகா கோயிலுக்கு சென்ற பேபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து 6 மாதத்திற்கு அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று தினகரன் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது முறையல்ல என்று கூறிய பேபி, இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளிடம் நான் புகார் கூறியுள்ளேன் என்று கூறியதாகவும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News