Kathir News
Begin typing your search above and press return to search.

மகிழ்ச்சி தரும் மாசி மகம்

மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மகிழ்ச்சி தரும் மாசி மகம்
X

KarthigaBy : Karthiga

  |  2 March 2023 3:15 PM GMT

ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமே மாசி மகம் என்று கொண்டாடப்படுகிறது. ஏனெனில் அந்த நாளில் தான் பார்வதி தேவி தட்சனின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவபெருமானின் சக்தியாகிய தேவியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று தட்சன் ஆசை கொண்டான். இதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். அந்த தவத்தின் பயனாக உமாதேவி தட்சன் மகளாக அவதரித்தாள். அவளுக்கு தாட்சாயணி என்ற பெயரிட்டு வளர்த்து வந்த தட்சன் தன் மகளை சிவபெருமானுக்கே திருமணம் செய்து வைத்தான்.


அன்னை உமாதேவி அவதரித்த நாள் மாசி மகம் என்பதால் அந்த நாள் புனித நாளாக கொண்டாடப்படுகிறது. அதோடு மாசி மாதத்தில் சந்திரன் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் நுழையும் நாளான மாசி மகம் அன்று ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். மக நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் கேது பகவான். இவர் ஞானத்தையும் முக்கியையும் அருள்பவர். செல்வவளம் சேரும் யோகத்தை வழங்க கூடியவர். மாசி மக நாளை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் அழைப்பார்கள். தீர்த்தமாடும் நிகழ்வின் சிறப்பினை எடுத்துரைக்க ஒரு புராண வரலாற்று கதையும் கூறப்படுகிறது.


ஒரு முறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது . இதில் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார் . அதில் இருந்து விடுபட வருணன் சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தார். இந்த நிலையில் வருணன் கட்டுண்டு கிடந்ததால் உலகில் மழையில்லாமல் வறட்சியும் பஞ்சமும் நிலவியது. அனைத்து உயிர்களும் துன்பம் அடைந்தன . இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர் .வருண பகவானை விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர்.


தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நான் மாசி மகத் திருநாளாகும். விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினார். பின்னர் ஈசனிடம் இறைவா நான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடலில் கிடந்த போது நீருக்குள் இருந்தபடியே உங்களை வணங்கினேன். அதன் பயனாக எனக்கு விடுதலை கிடைத்தது. அதேபோல் மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி இறைவனை வழிபடும் அனைவருக்கும் அவர்களின் பாவங்களையும் துன்பங்களையும் நீக்கி அருள் செய்ய வேண்டும் என்று கேட்டார். சிவபெருமானும் வருடம் கேட்ட வரத்தை வழங்கினார். மாசி மகத்தில் விரதம் இருப்பவர்களுக்கு சகல தோஷங்களும் நீங்கும் . குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும் . அன்றைய தினம் இறைவனை வழிபாடு செய்பவருக்கு எல்லா வளங்களும் கிடைக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News