மத்திய அரசின் அபார நடவடிக்கை : நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட ரூ.2400 கோடி பொருட்கள் அழிப்பு!
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட ரூபாய் 2400 கோடி மதிப்புள்ள ஒன்றரை லட்சம் கிலோ போதை பொருட்கள் அழிக்கப்பட்டன.
By : Karthiga
டெல்லியில் நேற்று போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் காணொளி கருத்தரங்கம் நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த இந்த கருத்து அரங்கம் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தீவிர ஆலோசனை நடத்தியது. மேலும் இதுவரை கைப்பற்றப்பட்ட ஏராளமான போதைப் பொருட்கள் அழித்து ஒழிக்கப்பட்டன. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அமித்ஷாவின் நேரடி பார்வையில் அவை அழிக்கப்பட்டன. அது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
போதைப் பொருள்கள் கட்டுப்பாட்டு பணியக அமைப்பின் ஹைதராபாத் பிரிவு மூலம் 6590 கிலோ, இந்தூர் பிரிவு மூலம் 822 கிலோ , ஜம்மு காஷ்மீர் பிரிவு மூலம் 356 கிலோ, போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன. அவை அழைக்கப்பட்டன. இதேபோல் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு சட்ட அமலாக்க பிரிவினரும் கைப்பற்றிய போதை பொருள்களும் ஆங்காங்கே அழிக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 884 கிலோ, மகாராஷ்டிராவில் 159 கிலோ அசாமில் 1486 கிலோ, சண்டிகாரில் 299 கிலோ, கோவாவில் 25 கிலோ , குஜராத்தில் 444,27 கிலோ , ஹரியானாவில் 2458 கிலோ , ஜம்முவில் 4069 கிலோ, திரிபுராவில் 1803 கிலோ , உத்தர பிரதேசத்தில் 4049 கிலோ , போதை பொருட்கள் அழிக்கப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அரசு போதைப் பொருள் வழக்கமற்ற இந்தியாவை உருவாக்க சூளுரை ஏற்கப்பட்டு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .அதன்படி 2022 ஜூன் 1 முதல் ஜூலை 15 - 2023 வரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக அமைப்பின் மூலம் 8 லட்சத்து 76 ஆயிரத்து 554 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதன் மதிப்பு ரூபாய் 9580 கோடியாகும். இது நிர்ணயத்தை இலக்கை விட 11 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் சமீப காலங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் 1,44,000 கிலோ போதைப் பொருள்கள் நேற்று அழித்து ஒழிக்கப்பட்டன. தொடர்ந்து போதை பொருள் இல்லா இந்தியா திட்ட இலக்கை நோக்கி போதை பொருள் கடத்தல் தடுக்கப்பட்டு அவை கைப்பற்றி அழிக்கப்படும் இவ்வாறு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SOURCE:DAILY THANTHI