Kathir News
Begin typing your search above and press return to search.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி பா.ஜ.க சார்பில் டெல்லியில் பிரம்மாண்ட பேரணி!!

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி பா.ஜ.க சார்பில் டெல்லியில் பிரம்மாண்ட பேரணி!!

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி பா.ஜ.க சார்பில் டெல்லியில் பிரம்மாண்ட பேரணி!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Oct 2019 10:10 AM GMT


மகாத்மா காந்தியின் 150வது பிறந்ததினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா , சோனியா, ராகுல் ஆகிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.


மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா கனவை நிறைவேற்றும் வகையில், ஆங்காங்கே சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்றன. இதில், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் என பலர் பங்கேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். பாஜக சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணியில் அமித்ஷா பங்கேற்றார்.


குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு காந்தியின் கனவுகளை நிறைவேற்றி இந்தியாவை மிளிரவைக்கும் அறிவிப்பை மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதேபோல நாட்டின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி விஜய் காட் சென்று சாஸ்திரியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News