Kathir News
Begin typing your search above and press return to search.

தாய்மொழி கல்வியை தீவிரமாக கையில் எடுக்கும் அமித்ஷா - என்ன கூறினார் தெரியுமா?

தாய்மொழியில் கல்வி கற்பதால் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கியுள்ளார்.

தாய்மொழி கல்வியை தீவிரமாக கையில் எடுக்கும் அமித்ஷா - என்ன கூறினார் தெரியுமா?
X

KarthigaBy : Karthiga

  |  25 Dec 2022 11:45 AM GMT

குஜராத் மாநிலம் விஜப்பூரில் பள்ளிவிழா ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


தாய்மொழியில் கல்வி கற்பதால் மாணவர்களின் சிந்தனை, பகுத்தறிவு, பகுப்பாய்வு திறன் அதிகரிக்கும். தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, உயர் படிப்புகள் ஆகியவற்றிற்கான பாடத்திட்டங்களை மாநில மொழிகளில் மொழிபெயர்க்கும் பணி நடந்து வருகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய ஆங்கிலேய கல்விக் கொள்கையின் கீழ் முறையான கற்றல் அறிவாற்றளின் அடையாளமாக இருந்தது. மாணவர்களிடம் சிந்தனை, ஆராய்ச்சி, பகுப்பாய்வு, முடிவு எடுக்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன் கிடையாது. இது சமூகத்தில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தியது. புதிய கல்விக் கொள்கை தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்ட அடிப்படை மாற்றங்களை கொண்டுள்ளது.


அடுத்த 25 ஆண்டுகளில் புதிய தேசிய கல்விக் கொள்கை இந்தியாவை உலகிலேயே முதல் இடத்துக்கு கொண்டுவரும். ஒரு மாணவர் தாய்மொழியில் படிக்கிற போது, பேசுகிறபோது, சிந்திக்கிற போது, அவரது சிந்திக்கும் திறனும், பகுத்தறியும் திறனும், பகுப்பாய்வு செய்யும் திறனும், ஆராய்ச்சி திறனும் இயல்பாக வெளிப்படும். புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை மாற்றம் மாணவர்களை அவர்களது தாய் மொழியில் கல்வியை கற்க செய்வதாகும். அடுத்த ஏழு ஆண்டுகளில் எல்லா மாணவர்களும் தங்கள் தாய் மொழியில் கல்வி கற்கின்ற நிலை வரும் என்று நம்புகிறேன் அவர்களது தாய்மார்களே அவர்களுக்கு தங்கள் வழியில் கல்வியை போதிக்க முடியும் குஜராத்தி தெலுங்கு ஒடியா பஞ்சாபி வங்காளம் ஆகிய மொழிகளில் உயர்கல்வி மருத்துவ கல்வி தொடங்கிவிடும் அதிலிருந்து இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கிய பங்களிப்பை செய்யும் புதிய தேசிய கல்விக் கொள்கையை வணிக கல்வியிலும் திறன் கல்வியிலும் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளது. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்புக்குள் வணிக கல்வியுடன் இணைக்கப்பட்டு விடுவார்கள் இது அவர்களே சுய வேலைவாய்ப்பு குறு மற்றும் குடிசை தொழில்கள் செய்வதற்கு உதவும் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News