மே 21 வாரணாசியில் பாஜக மகளிர் அணி சார்பில் பேரணி - பிரதமர் மோடி பிரச்சாரம்!
வாரணாசியில் வரும் 21-ஆம் தேதி பா.ஜ.க மகளிர் அணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
By : Karthiga
பா.ஜ.க மகளிர் அணி நடத்தும் பிரச்சார கூட்டம் வரும் 21-ஆம் தேதி உத்திரபிரதேசத்தின் சம்பூர்ண சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இந்த பழமையான கல்வி நிறுவனம் பிரதமர் மோடியின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் உள்ளது. இக்கூட்டத்தில் கிழக்கு உத்தர பிரதேசத்தில் மீதம் இரண்டு கட்ட பாராளுமன்ற தொகுதிகளின் பெண் வாக்காளர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டம் நடத்தும் பொறுப்பு பாஜக மகளிரணியிடம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாஜக மகளிர் அணியின் பொறுப்பு செயலாளர் அர்ச்சனா மிஸ்ரா கூறும்போது பிரதமர் வேப்பமனு தாக்கலுக்காக இந்த முறை நடைபெற்ற ஊர்வலத்தில் திரளான பெண்கள் கூடி நின்று ஆர்ப்பரித்தனர் .இதைக்கண்டு பிரதமர் மோடிக்கு உதித்த யோசனையின் பேரில் இந்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.அனைத்து ஏற்பாடுகளும் நடவடிக்கைகளும் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே செய்ய உள்ளனர் என்றார்.
பாஜகவின் இந்த வித்தியாசமான பிரச்சார கூட்டத்திற்கான அதன் பெண் நிர்வாகிகள் பலரும் நேரடியாக அழைப்பிதழ் வினியோகித்து வருகின்றனர். இக்கூட்டத்தில் வாரணாசி மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பாராளுமன்ற தொகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்களை பங்கேற்க செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது .இதன் மூலம் பாஜக மகளிர் அணியினரும் பெண் நிர்வாகிகளும் தமக்கு கிடைத்த முதல் வாய்ப்பை முறையாக பயன்படுத்தி கட்சி தலைமையிடம் பாராட்டை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.
SOURCE :Dinaboomi