மே மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? இதோ பட்டியல்!
மே மாதத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் விடுமுறை பட்டியல்களில் தொகுப்பு.
By : Bharathi Latha
பெரும்பாலானோர் அனைவருமே பயன்படுத்தும் விதமாக வங்கிகள் இருந்து வருகின்றனர். அத்தகைய வங்கிகளின் பள்ளி விடுமுறை நாட்களில் நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம். பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு மே மாதமே விடுமுறை மாதமாகத் தான் இருக்கும். அதேபோல் அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் பணி நாட்கள் தொடர்புடைய விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படும். மே மாதத்தில் பல்வேறு விடுமுறைகள் வருவதால் வங்கிகளுக்கு அதிகமாக விடுமுறை நாட்கள் வருகின்றது.
மே 1ஆம் தேதிதான் எப்போதுமே உழைப்பாளர் தினம் என்பதும், அன்றைய தினம் பொது விடுமுறை என்பதும் எவரும் செய்திதான். ஆனால், இந்த ஆண்டு இது ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. வார நாட்களில் வந்திருந்தால் பணியாளர்களுக்கு மற்றுமொரு விடுமுறை நாள் கிடைத்திருக்கும். அடுத்ததாக ரம்ஜான் இந்த ஆண்டு மே மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
தொடக்கத்திலேயே வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி பட்டியலிட்டு விடுகிறது. அதே சமயம், ஒவ்வொரு மாநிலம் அல்லது இனம் சார்ந்த பண்டிகைகளுக்காகவும் தொடர்புடைய பகுதிகளில் மட்டும் வங்கி விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே மே 1 மற்றும் 3, 8, 14,15, 22, 28, 29 நாட்களில் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
Input & Image courtesy: News 18