'ஜல் ஜீவன் மிஷன்'திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய அளவில் மூன்றாவது இடம் பிடித்த மயிலாடுதுறை மாவட்டம்
ஜல்ஜீவன் மிஷின் திட்டுதல் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய அளவில் மயிலாடுதுறை மாவட்டம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்காக மத்திய அரசு மாவட்ட கலெக்டர் லலிதாவுக்கு விருது வழங்கியுள்ளது.
By : Karthiga
மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய அரசின் 'ஜல்ஜீவன் மிஷன் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்குள் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 2056 குடியிருப்புகளில் 'ஜல்ஜீவன் மிஷன்' 20220-21, 15வது நிதி குழு மானிய திட்டம் 2021- 22 மற்றும் சொந்த குடிநீர் ஆதாரங்களின் மூலம் தற்போது வரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 444 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது 55 சதவீதம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு 'ஜல்ஜீவன் மிஷன் - 2023 'விருதுகளை அறிவித்துள்ளது. இதில் தேசிய அளவில் 50 முதல் 75 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்ட மாவட்டங்களில் பல்வேறு வகைப்பாடுகளில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்கள் என்ற வகைப்பாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும், "சாதனையாளர் "என்ற விருதையும் மத்திய அரசிடம் பெற்றுள்ளது. அதன்படி நேற்று மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மத்திய அரசிடம் இருந்து விருதினை பெற்றார்.