Kathir News
Begin typing your search above and press return to search.

உதயநிதிக்கு மேயர் பதவி; கனிமொழிக்கு கல்தா! - ஸ்டாலின் முடிவு; தி.மு.க தொண்டர்கள் குமுறல்!!

உதயநிதிக்கு மேயர் பதவி; கனிமொழிக்கு கல்தா! - ஸ்டாலின் முடிவு; தி.மு.க தொண்டர்கள் குமுறல்!!

உதயநிதிக்கு மேயர் பதவி; கனிமொழிக்கு கல்தா! - ஸ்டாலின் முடிவு; தி.மு.க தொண்டர்கள் குமுறல்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Aug 2019 9:23 AM GMT



“கழகமே குடும்பம்” என்று திமுகவை தொடங்கிய அண்ணாதுரை கூறினார். ஆனால் “குடும்பமே கழகம்” என்று திமுகவை மாற்றினார் கருணாநிதி. கருணாநிதியின் கொள்கைபடி, திமுகவை தன் குடும்ப கம்பெனியாக மாற்றி வருகிறார் ஸ்டாலின்.


திமுக உதயமான போது, அதற்கு தலைவராக யாரும் கிடையாது. பொதுச் செயலாளர் பதிவிதான் உயர்ந்த பதவியாக இருந்தது. 1969 - ஆம் ஆண்டு அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு, எம்.ஜி.ஆரின் தயவால் முதல்வர் பதவியை ஆக்கிரமித்துக்கொண்ட கருணாநிதியின் கையில் ஆட்சி இருந்தது.


இருந்தாலும் அப்போது பொதுச் செயலாளராக இருந்த நெடுஞ்செழியன் கட்டுப்பாட்டில்தான் திமுக இருந்தது.


இதனால் முதல்வராக இருந்தாலும் கருணாநிதியால் கட்சியில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. எனவே கட்சிக்கும் எப்படியாவது தலைவராக வேண்டும் என்று நரித்தனமாக செயல்பட்டு அதுவரை யாரும் அமராத தலைவர் பதவியை அபகரித்துக்கொண்டார் அவர்.


அதன்பிறகு சாகும்வரை, திமுகவின் தலைவராக கருணாநிதியே இருந்தார். அந்த அளவிற்கு திமுகவில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டது. எதிர்த்து கேள்வி கேட்ட எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். திமுகவில் வாரிசு அரசியல் உருவாகிறது. திமுக இளவரசராக ஸ்டாலின் முடிசூட்டப்படுவதை எதிர்த்த வைகோ, திமுகவில் இருந்து துரத்தியடிக்கப்பட்டார்.





அதற்குப்பின்னர் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று திமுகவை தனது குடும்ப சொத்தாக மாற்றினார் கருணாநிதி.


இப்படித்தான் அண்ணாதுரையின் “கழகமே குடும்” என்ற திமுகவை, “குடும்பமே கழகம்” என்ற நிலைக்கு மாற்றிக்காட்டினார் கருணாநிதி.


இதுதான் திமுகவின் கடந்தகால ஜனநாயக கேலிக்கூத்து வரலாறு. இப்போது, தந்தையின் வழியில் தனயன் ஸ்டாலினும் திமுகவை தன் குடும்ப சொத்தாக மாற்றி வருகிறார்.


பண பலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் சினிமாவில் அறிமுகமாகி, நடிகைகளின் பின்னால் சுற்றித் திரிந்தார் உதயநிதி. அவரை முரசொலி அறக்கட்டளைக்கு நிர்வாக இயக்குனர் என்ற அதிமுக்கிய பதவில் நுழைத்து, முரசொலி அறக்கட்டளையை ஸ்டாலின் தனது குடும்ப சொத்தாக்கினார்.





அதன்பிறகு உதயநிதியை, திமுகவின் இளைஞரணி செயலாளர் ஆக்கினார் ஸ்டாலின். இது திமுகவின் குடும்ப அரசியலின் உச்சம் என்று அனைவரும் விமர்சித்தாலும் அதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை அவர்.


திமுகவிற்கு ஆதிகாலம் தொட்டு போஸ்டர் ஒட்டிய தொண்டர்களின் 3-ம் தலைமுறையினரும் இன்று போஸ்டர்தான் ஒட்டுகின்றனர் என்று திமுகவினர் கொந்தளித்தனர். ஆனால் அதற்கெல்லாம் ஸ்டாலின் அலட்டிக்கொள்ளவில்லை. அவர் தனது கொள்கையில் தெளிவாக இருந்து அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டார்.


தனது மகன் உதயநிதிக்கு மேயராக பட்டம் சூட்டி அழகு பார்க்க திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு அமைச்சர், துணை முதல்வர், முதல்வர் என்று ஸ்டாலின் திட்டம் நீள்கிறது.


எனவேதான் உள்ளாச்சி தேர்தலை ஸ்டாலின் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்.


விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதியை போட்டியிட வைத்து அவரை மேயராக்க சகல வேலைகளையும் இப்போதே தொடங்கிவிட்டனர்.


சென்னை மேயர் பதவியை உதயநிதி பெற்று விட்டால், அடுத்தது அமைச்சர், பின்னர் திமுக தலைவர், முதலமைச்சர் பதவிகளை பறித்துக்கொள்ளலாம் என்பது ஸ்டாலின் குடும்ப கணக்கு.


இவை அனைத்துக்கும் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்தான் திட்டம் வகுத்து கொடுத்து, செயல்படுத்தி வருகிறார். அவருக்கும் விரைவில் திமுகவில் முக்கிய பதவி காத்திருக்கிறது.


திமுகவின் மூத்த தலைவர்களுக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் மனதுக்குள் குமுறிக்கொண்டே ஒப்புக் கொண்டுதானே ஆகவேண்டும்.


இதுஒருபுறம் இருக்க, கனிமொழியை ஒரம்கட்டும் வேலையும் கனகச்சிதமாக நடந்துவருகிறது.


தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கனிமொழி, டெல்லியில் ஸ்டாலினின் மனசாட்சியாக இருப்பார் என்றுதான் திமுகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் பாராளுமன்ற திமுக தலைவராக டிஆர்.பாலு நியமிக்கப்பட்டார்.





திமுக நிகழ்ச்சிகளில் கனிமொழி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இத்தனைக்கும் அவர் திமுக மகளிரணி செயலாளராக உள்ளார். கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்சிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வந்திருந்தார். கி.வீரமணி உள்பட அனைவரும் மேடையில் அமர்ந்து இருந்தனர். ஆனால் கனிமொழிக்கு மேடையில் இடம் இல்லை. அவர் புறக்கணிக்கப்பட்டார்.


இது கட்சிக்குள் மட்டுமல்லாமல், வெளியிலும் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது, மக்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்குகூட கனிமொழிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம்.


ஆனால் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உதயநிதியே முன்னிலைப் படுதி்தப்படுகிறார்.


கனிமொழியை புறக்கணிப்பதும், உதயநிதியின் கையில் திமுகவை அடகு வைப்பதும், திமுகவில் உள்ள சில முக்கிய தலைவர்களுக்கும் பிடிக்கவில்லை. ஆனாலும் வெளியில் சொல்ல முடியாமல் குமுறுகின்றனர்.


திமுக தொண்டர்களும் இதே மனநிலையில்தான் உள்ளனர். இதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பொங்கி எழலாம் என்கின்றனர் மூத்த உடன்பிறப்புகள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News