Kathir News
Begin typing your search above and press return to search.

ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை - மத்திய அரசு முடிவு

அபாயகரமான இடங்கள் கண்டுபிடிப்பு ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை - மத்திய அரசு  முடிவு
X

KarthigaBy : Karthiga

  |  19 Sep 2022 11:45 AM GMT

ரயில் தண்டவாளங்களில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன .கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 45 யானைகள் இவ்வாறு உயிரிழந்திருப்பதாக ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியிருந்தது .எனவே யானைகள் உயிரிழப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 1800 கிலோமீட்டர் தண்டவாள பகுதிகளில் அபாயகரமான இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.அவற்றில் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.


இதில் 15 முதல் 20 பகுதிகளில் சோதனை அடிப்படையில் சரிவு பாதை உள்ளிட்டவை அமைத்து யானைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதிகள் பற்றிய விவரங்களை ரயில்வேக்கும் அளித்து இருக்கிறது. கற்கள் மற்றும் செங்குத்தான கரைகள் இருப்பதால் யானைகளால் வேகமாக தண்டவாளங்களை கடக்க முடிவதில்லை. எனவே மண்ணால் ஆன சாய்தளங்கள் அமைக்கப்பட்டு சோதிக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News