மதுரை மீனாட்சி அம்மன் கோவில்: விளக்குகள் விலை உயர்வுக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விளக்குகள் விலை உயர்த்த பட்டுள்ளதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
By : Bharathi Latha
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். மேலும் பக்தர்களின் நலனுக்காக கோவில் நிர்வாகமே விளக்குகளை இங்கு விற்பனை செய்து வருகிறது அப்படி விற்பனை செய்யும் பல விளக்குகளை தற்போது வரை ஐந்து ரூபாயாக இருந்த வந்தது. இதன் மூலம் விற்பனை செய்யும் வருவாய் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்குமாம். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை உயர்வு காரணமாக கோவில் நிர்வாகம் இதன் விலையை உயர்த்த முடிவு செய்து.
அதன்படி கோவில் வளாகத்திற்குள் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் விளக்குகள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்ய பொதுமக்களிடம் கோவில் நிர்வாகம் கருத்து கேட்டுள்ளது. இதற்கு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில், மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் உயர்த்த உத்தேசித்துள்ள விளக்குகளின் விலை உயர்வை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் மீது நடத்தப்படும் கட்டண முறையை உடனடியாக நிர்வாகம் திரும்ப பெற வேண்டும். மேலும் பல்வேறு நபர்களும் இந்த ஒரு தீர்மானத்திற்கு எதிராக தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார்கள். அதை தொடர்ந்து இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பிலும், பகதர்கள் சார்பில் சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு தனித்தனியாக விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களின் ஆட்சேபனையை கடிதம் மூலம் அனுப்பி உள்ளதாக சுந்தரவடிவேல் தெரிவித்தார். இதன் மூலம் பக்தர்களும் விளக்கு கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Input & Image courtesy: Malaimalar