Kathir News
Begin typing your search above and press return to search.

ஆண்களே இனி உங்கள் வேலையை உங்கள் மனைவி வேலையுடன் ஒப்பிட்டு அவர்களை மட்டம் தட்ட முடியாது!- ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

குழந்தைகளையும் குடும்பத்தையும் விடுமுறையே இல்லாமல் பராமரிக்கும் இல்லத்தரசிகளின் 24 மணி நேர பணியை கணவர் பார்க்கும் 8 மணி நேர வேலை ஒப்பிட முடியாது என்று சென்னை ஹைகோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

ஆண்களே இனி உங்கள் வேலையை உங்கள் மனைவி வேலையுடன் ஒப்பிட்டு அவர்களை மட்டம் தட்ட முடியாது!- ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
X

KarthigaBy : Karthiga

  |  25 Jun 2023 11:30 AM GMT

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 1965ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். மத்திய அரசு பொது நிறுவனத்தில் பணியாற்றிய கணவர் பின்னர் வெளிநாட்டில் வேலை கிடைத்த அங்கு சென்று விட்டார். அங்கு சம்பாதித்த பணத்தை எல்லாம் தன் மனைவிக்கு அனுப்பி வைத்தார். அவர் பல சொத்துக்களை தன் பெயரில் வாங்கினார். அதுமட்டுமில்லாமல் ரொக்கமாக பெரும் தொகையும் ஏராளமான தங்க நகைகளையும் வைத்திருந்தார் கணவர் வெளிநாட்டில் இருந்ததால் உள்ளூரில் மனைவிக்கு மற்றொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடரின் உச்சகட்டமாக தன் சொத்துக்களை விற்பனை செய்யும் முகவராக அவரை அந்த பெண்மணி நியமித்தார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் நாடு திரும்பி மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள் எல்லாம் தன்னுடைய உழைப்பில் வாங்கப்பட்டது அவளுக்கு சொத்தின் மீது எந்த உரிமையும் கிடையாது என்று சிதம்பரம் சார்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சார்பு கோட்டும் மனைவிக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. இந்த சொத்துக்கள் எல்லாம் கணவரின் சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டது என்பதால் சொத்துக்கள் எல்லாம் கணவருக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிதம்பரத்தில் உள்ள கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது .


இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த செசன்ஸ் கோர்ட் கீழ் கோர்ட் தீர்ப்பை மாற்றியமைத்தது சில சொத்துக்கள் மனைவிக்கு சொந்தம் என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கணவரும் மகன்களும் சென்னை ஐகோர்டின் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அப்போது தன் பெற்றோர் கொடுத்த தங்க நகைகளை விற்பனை செய்து தான் தன் கணவரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பினேன். தன் வரதட்சணை நிலத்தை விற்பனை செய்து சில சொத்துக்களை வாங்கினேன். டைலர் தொழில் மூலமும் சம்பாதித்தேன் என்று மனைவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது .


இதற்கு கணவர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது திருமணத்திற்கு பின் வீட்டையும் குழந்தைகளையும் மனைவி பார்த்துக்கொள்கிறாள். இதனால் தான் கணவரால் தன் தொழிலை திறம்பட செய்ய முடிகிறது. அதன் மூலம் கிடைக்கும் செல்வம் மீது கணவர் மனைவி இருவருக்கும் சம பங்கு உண்டு.


குடும்பத்தையும் குழந்தைகளையும் குடும்ப டாக்ட்டர் போல 24 மணி நேரமும் விடுமுறை இல்லாமல் மனைவி பார்த்துக்கொள்கிறார். அதனால் மனைவியின் பணியுடன் கணவர் பார்க்கும் எட்டு மணிநேர வேலையை ஒப்பிட முடியாது. திருமணத்துக்கு பின் கணவர் குழந்தைகளுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து கூலி பெறாத வேலையாக மனைவி பணியாற்றுகிறார். அப்படிப்பட்டவளுக்கு இறுதியில் எதுவும் இல்லை என்றால் அது தேவையில்லாத வேதனையை அவளுக்கு கொடுக்கிறது.


கணவனும் மனைவியும் வாகனத்தில் உள்ள இரு சக்கரங்கள் போன்றவர்கள் கணவன் சம்பாதிப்பதும் குடும்பத்துக்காக மனைவி உழைப்பதும் சரிசமமானது. அது ஒரு கூட்டு உழைப்பு. இதன் மூலம் கிடைக்கும் பலன்களை பெறும் பயனாளிகளாக இருவரும் உள்ளனர். சொத்துக்கள் கணவன் அல்லது மனைவி என்று யார் பெயரில் வாங்கினாலும் அது இரண்டு பேரும் பணத்தை சேமிக்க எடுக்க கூட்டு முயற்சியால் தான் வாங்கப்பட்டுள்ளது.


குடும்பத்தை கவனித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ இல்லத்தரசிகள் அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. அதே நேரம் இல்லத்தரசிகளின் பங்களிப்பை இந்த ஹைகோர்ட் அங்கீகரிப்பதற்கு தடையாக எந்த சட்டமும் இல்லை. இந்த வழக்கை பொறுத்தவரையில் மொத்தம் ஐந்து சொத்துக்கள் உள்ளன. அதில் மூன்று சொத்துக்கள் கணவன் மனைவி ஆகிவருக்கு சமபங்கு உண்டு. மீதமுள்ள இரண்டு சொத்துகளுக்கு மனைவியே முழுமையானவர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News