தமிழகத்தில் ரேஷன்கார்டு வைத்திருக்கும் சிறுவியாபாரிகள் 15.75 லட்சம் பேருக்கு ரூ.1958.36 கோடி சிறுவணிக கடன் வழங்கப்பட்டது!
தமிழகத்தில் ரேஷன்கார்டு வைத்திருக்கும் சிறுவியாபாரிகள் 15.75 லட்சம் பேருக்கு ரூ.1958.36 கோடி சிறுவணிக கடன் வழங்கப்பட்டது!
By : Kathir Webdesk
ரேசன்கார்டு வைத்துள்ள இளநீர் கடை, டீ கடை, பெட்டிக்கடை, காய்கறி கடை என சிறு வியாபாரிகளுக்கு இதுவரை 15,75,319 நபர்களுக்கு ரூ.1,958.36 கோடி சிறுவணிகக்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் வெளியிட்ட அவர்,
ரேசன்கார்டு வைத்துள்ள இளநீர் கடை, டீ கடை, பெட்டிக்கடை, காய்கறி கடை என சிறு வியாபாரிகளுக்கு இதுவரை 15,75,319 நபர்களுக்கு ரூ.1,958.36 கோடி சிறுவணிகக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை 934 நபர்களுக்கு ரூ.2.88 கோடியும், மதுரையில் மட்டும் ரூ.4.80 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தொடக்க கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகக்கடன் வழங்கப்படுவது இல்லை. கூட்டுறவு வங்கிகளான 23 மாவட்ட கூட்டுறவு வங்கிகள், 874 கிளைகள் மூலம் சிறுவணிகக்கடன் வழங்கப்பட்டு வருகிறது என்று எதிர்க்கட்சிகள் தவறாக தகவல் பரப்பி உள்ளார்கள். முதலமைச்சர் உத்தரவின்படி சிறுவணிக்கடனை ரூ.50,000ம் உயர்த்தி வழங்கி உள்ளார்கள்.
தகுதியுள்ள அனைவருக்கும் கடன் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் இங்கு சிறுவணிக்கடன் வழங்கப்படும். தகுதியானவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என நோட்டீஸ் ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.