அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் வைத்த செக்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
By : Mohan Raj
2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்துவிட்டார் என்று தொடர்ந்த வழக்கை கடந்த வருடம் பாதிக்கப்பட்டவர்கள் சமரசம் செய்து கொண்டதாகக் கூறி, அப்போதைய
போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
புகாரில் கூறப்பட்டிருப்பது என்ன?
மெட்ரோ போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்பப் பணியாளராகப் பணிபுரியும் நபர் ஒருவர் அப்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடம் காலியாக உள்ளதாகவும், அதற்குப் பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என ராஜ்குமார் புகார்தாரரிடம் தெரிவித்தார்.
புகார்தாரர் 2015 ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் சென்னையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்குச் சென்று ரூ. 40 லட்சத்தை செந்தில்
பாலாஜி முன்னிலையில் அவரது உதவியாளர் சண்முகத்திடம் வழங்கினார். செந்தில் பாலாஜி அவருக்கு வேலை உறுதி என உறுதியளித்தார்.
ஆனால் தேர்வுப் பட்டியல் வெளிவந்தபோது அவரது பெயர் அப்பட்டியலில் இல்லை. அதனால் கொடுத்த தொகையைத் திருப்பித் தருமாறு புகார்தாரர் ராஜ்குமாரை அணுகியபோது இரண்டு 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். ஆனால் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்த புகார்தாரர். குற்றம் சாட்டப்பட்டவர் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்த்து வந்தார், பின்னர் இந்த விஷயத்தைத் தொடர வேண்டாம் என்று மிரட்டப்பட்டார்.
பின்னர் புகார் அளிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனை கடந்த வருடம் சென்னை உயர்நீதிமன்றம் இவரும் சமரசம் செய்துக்கொண்டதாக கூறி இவ்வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து.
உச்சநீதிமன்ற உத்தரவு
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் P. தர்மராஜ் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம். நீதிபதி எஸ். அப்துல் நசீர், நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா, நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, இந்த வழக்கை விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தற்போது திமுக அரசில் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.