Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு பங்களாவில் குடியேறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - பின்னணி என்ன?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியேற உள்ளார்.

அரசு பங்களாவில் குடியேறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - பின்னணி என்ன?

KarthigaBy : Karthiga

  |  22 March 2023 6:15 AM GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அமைச்சராக பதவி ஏற்க தற்போது அவர் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த வீடு முதலமைச்சரின் முகாம் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. எனவே அவரைக் காண்பதற்கு ஏராளமான அரசு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் தினமும் வந்து செல்கின்றனர். முழுவதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.


தற்போது அமைச்சர உதயநிதி ஸ்டாலினையும் சதிப்பதற்கு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே அந்த பகுதியில் இட நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அமைச்சர்களுக்காக அரசு வழங்கும் பங்களாவில் குடியேற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன்படி அடையாறில் உள்ள அரசு பங்களாவில் குடியேற இருக்கிறார். அவருக்காக கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி என்ற அரசு பங்களா புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த பங்களாவில் இதுவரை சபாநாயகர் அப்பாவு வசித்து வந்தார். கடந்த ஜனவரியில் அவர் அந்த பங்களாவின் அருகில் உள்ள மலரகம் என்ற பங்களாவுக்கு மாறி சென்றார். தற்போது குறிஞ்சி பங்களா வேகமாக புதுப்பிக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டு தயாராகி வருகிறது. அடுத்த மாதம் ஏப்ரலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த அரசு பங்களாவுக்கு குடும்பமாக சென்று குடியேறுகிறார். கடந்த தி.மு.க ஆட்சியில் துணை முதலமைச்சர் ஆக இருந்த மு.க.ஸ்டாலின் அந்த பங்களாவில் தான் குடியிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News