'மின்மினி'- உலகத் தமிழர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்த புதிய சமூக ஊடக செயலி!
உலகத் தமிழர்கள் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மின்மினி சமூக ஊடக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
By : Karthiga
உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழர்கள் தங்களின் தோழமை மற்றும் ஒற்றுமை உணர்வை உணரக்கூடிய ஒரே தளமாக மின்மினி என்ற சமூக ஊடக செயலி உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்மினி சமூக ஊடக செயலியின் நிர்வாக துணை தலைவர் எஸ். ஸ்ரீராம் கூறியதாவது :-
மின்மினி சமூக ஊடக செய்தியில் பயனர்கள் ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். தனிப்பட்ட மற்றும் பொதுவான குழுக்களை உருவாக்கலாம் .மேலும் மற்ற செயலிபயனார்களுடன் தடை இன்றி தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். மின்மினிக் குழுவால் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மல்டி சேனல் நெட்வொர்க் களை கொண்ட மின்மினி செயலியானது கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கும், சிட்டிசன் ஜர்னலிஸ்ட் களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக விளங்கும்.
இதுவரை சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்கள் கூட இந்த மின்மினி செயலியை மிகவும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய எளிய அம்சங்களுடன் டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. மின்மினியில் அங்கீகாரம் என்ற நிலை பணம் கொடுத்து பெறப்படுவதில்லை .மாறாக கன்டென்ட் தரம் மற்றும் மக்களின் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் அங்கீகாரமானது நிறுவனத்தால் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் நீல நிற டக் மூலம் அடையாளம் காணப்படுவார்கள். எனவே பயனர்கள் நம்பகமான கன்டன்டுகளை படிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள் என்பதை உணரலாம்.
காலப்பகுதியில் இந்த தளத்தில் மற்றொரு பயனர்களுடன் தகுதியான கன்டென்டுகளை பகிர்ந்து அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கும் தனிப்பட்ட பயணங்கள் அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னர்கள் என மேம்படுத்தப்படுவார்கள். மின்மினி மூலம் விளம்பரதாரர்கள் இந்தியாவின் கடைசி கிராமங்கள் வரை சென்றடைய முடியும். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறிய கடைகள் ஏஜெண்டுகள் மற்றும் ஊழியர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு மின்மினி கடைகள் என்ற அங்கீகாரம் கடைகளுக்கு வழங்கப்படும். அந்த கடைகள் டிஜிட்டல் தொழிலுக்குள் கொண்டுவரப்பட்டு மின்மினி செயலிலும் சேர்க்கப்படுகிறது.
அந்த கடைக்கு வழங்கப்பட்ட பிரத்யேக கியூ ஆர் கோடுகள் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து வாடிக்கையாளர்களை மின்மினி பயனர்களாக மாற்றும்போது கடை உரிமையாளர்கள் வருமானம் பெறுவர். மின்மினி கடைகள் மூலம் பயனர்களும் எளிதாக விளம்பரங்களை வாங்கி கொடுக்கலாம் .தாங்கள் செய்யும் தொழில் வாடிக்கையாளர்களை சென்று அடைய விளம்பரம் பெற விரும்பும் சேவை, பிறந்தநாள் வாழ்த்து, திருமணநாள் வாழ்த்து, இரங்கல் செய்தி என பல்வேறு விளம்பரங்களை வாங்கி கொடுக்கலாம். விளம்பரங்கள் மூலம் அந்த பகுதிகளுக்கு எளிதாக இந்த விளம்பரங்கள் சென்றடையும்.
இந்த செயலியானது தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்தில் பிளம்பர்கள், கார்பென்டர்கள் போன்ற ஆயிரக்கணக்கான சேவை வழங்குபவர்களை காலப்போக்கில் கொண்டிருக்கும் .எனவே பயனர்கள் அத்தகைய பணியாளர்களை உடனடியாக நாடலாம். சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான அதன் தனித்துவமான விளம்பர தொகுப்புகளுடன் மின்மினி பயனர்களை சென்றடையும் வழியையும் வழங்கும். தமிழகம் முழுவதும் 40 லட்சத்திற்கும் அதிகமான கடைக்காரர்கள், சேவை வழங்குபவர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் மனிதர்கள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளோம்.
அவர்களில் பலரை மின்மினி செயலி மூலம் லிஸ்ட் செய்து அவர்களையும் டிஜிட்டல் பிசினஸிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். விளம்பரதாரர்கள் மற்றும் பிராண்டுகளுக்கு எங்களின் தனித்துவமான பின்கோடு மூலம் தமிழ்நாட்டின் கடைசி தாலுகா வரை கடைசி மைல் தூரத்தை சென்றடையும் வழியை மின்மினி வழங்கும். மின்மினி செயலியை google play store மற்றும் apple ஆப் ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI