Kathir News
Begin typing your search above and press return to search.

அட்லாண்டிக் பெருங்கடலில் நடந்த அதிசயம் என்ன தெரியுமா?

கவிழ்ந்த படகில் 16 மணிநேரம் சிக்கியும் உயிர் தப்பிய மாலுமி

அட்லாண்டிக் பெருங்கடலில் நடந்த அதிசயம் என்ன தெரியுமா?
X

KarthigaBy : Karthiga

  |  5 Aug 2022 10:15 AM GMT

போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் இருந்து கடந்த திங்கட்கிழமை இரவு புறப்பட்ட ஒரு படகு அட்லாண்டிக் பெருங்கடலில் திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை மாற்றத்தால் கவிழ்ந்துவிட்டது. அந்த படகில் இருந்த பேரழிவு சமிக்ஞை அனுப்பப்பட்டது.அந்த சமிக்ஞை ஸ்பெயின் நாட்டின் வட மேற்கில் உள்ள காலிசியா பகுதியிலிருந்து சென்றது.

அந்த சமிக்ஞை கிடைத்ததை தொடர்ந்து ஸ்பெயின் நாட்டின் கடலோர காவல் படையினர் விரைந்து சென்று கவிழ்ந்த அந்தப் படகைத் தேடிக் கண்டுபிடித்தனர். ஆனால் அந்த படகில் சென்று மீட்டு காப்பாற்றுவதற்கு தடையாக கடல் சீற்றம் அமைந்தது. எனவே அவர்களை மறுநாள் காலை வரை காத்திருக்க வைக்க வேண்டியதாயிற்று.

மறுநாள் காலையில் 5 ஹெலிகாப்டர்கள் வானில் அணிவகுகக்க 5 நீர்மூழ்கி வீரர்களுடன் மீட்புக் கப்பல் சென்று அந்த படகில் உயிருடன் மீட்டனர் இதில் என்ன அதிசயம் என்றால் அவர் படகுகக்குள் காற்றுக்குமிழியைப் பயன்படுத்தி 16 மணி நேரம் உயிர்பிழைத்ததுதான்.

இப்படிப்பட்ட நிலையில் மனிதன் உயிர் பிழைப்பது சாத்தியமற்ற நிலை அதிசயமானது என சொல்லப்படுகிறது.

மீட்கப்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் வயது 62 ஸ்பெயின் நாட்டின் கடலோர பாதுகாப்பு மற்றும் மீட்பு அமைப்பு கூறும்போது "காப்பாற்றப்படும் ஒவ்வொரு உயிரும் எங்களின் மிகப்பெரிய வெகுமதி ஆகும்" என தெரிவித்தது.

மீட்கப்பட்ட மாலுமி , மருத்துவ பரிசோதனைகளுக்காக ஹெலிகாப்டர்



மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News