Kathir News
Begin typing your search above and press return to search.

பாரத பிரதமர் நரேந்திர மோடி மீது பொய்யான தகவல்களை பரப்ப முயன்ற காங்கிரஸ் MLA.!

பாரத பிரதமர் நரேந்திர மோடி மீது பொய்யான தகவல்களை பரப்ப முயன்ற காங்கிரஸ் MLA.!

பாரத பிரதமர் நரேந்திர மோடி மீது பொய்யான தகவல்களை பரப்ப முயன்ற காங்கிரஸ் MLA.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 2:14 AM GMT

பாரத பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து காங்கிரஸ் MLA ஜிது பட்வாரி பொய்யான தகவலை டுவிட்டரில் பரப்ப முயன்று நெட்டிசன்களின் ஆத்திரத்திற்கு ஆளாகி இருக்கிறார். ஆகஸ்ட் 1 ஆம் தேதி டிவிட்செய்த காங்கிரஸ் MLA ஜிது பட்வாரி, நரேந்திர மோடி அவர்கள் ரயில்வே துறை தனியார் நிர்வாகத்துக்கு விற்கப்படும்போது ஆடம்பர விமானத்தில் பயணம் செய்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

விமானத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விமானத்தின் உட்புறத்தில் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்தின் உட்புறங்களை காட்டுகிறது என்றார். ஒரு விமானத்தின் ஆடம்பர கேபின் புகைப்படத்தை வெளியிட்ட ஜிது பட்வாரி, "பிரதமர் மோடி தேயிலை விற்பனையாளர் பின்னணியில் இருந்து வந்தாலும், நாம் அவருக்கு சிறந்த வசதிகளை வழங்கினால் மட்டுமே அவர் இந்தியாவை சிறந்த நாடாக உருவாக்குவார் போலும்" என விமர்சித்தார்.

டிவிட்டரில் வெளியான படம் ஆடம்பர விமானத்தின் தோற்றத்தை கொண்டிருந்தாலும், இணையத்தில் அதைப்பற்றி தேடிப் பார்த்த போது காங்கிரஸ் தலைவரின் பொய்களை வெளிப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆடம்பர விமானத்தில் பறக்கிறார் என குறிப்பிடப்பட்ட விமானமானது, ஒரு Deer Jet விமான நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஜெட்விமானம் 787 டிரீம் ஜெட், போயிங் 787 டிரீம் லைனர் வகை விமானத்தைத் காட்டுகிறது.

இந்த விமானம் ஒரு ஆடம்பர வணிக ஜெட் விமான சேவையை வழங்கும் விதத்தில் உருவாக்கியுள்ளனர். இது தனியாருக்கு சொந்தமான போயிங் 787 விமானம் ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பயன்படுத்தப்படும் போயிங் 747விமானம் ஆனது பிரதமர் மற்றும் VVIP கள் பயன்படுத்த ஏர் இந்தியா இயக்கி வரும் 747 போயிங் விமானம் மட்டுமே. இந்திய பிரதமர் தனது சர்வதேச பயணத்திற்காக ஏர் இந்தியாவால் இயக்கப்படும் போயிங் 747 விமானத்தையே பயன்படுத்துகிறார். போயிங் 747 விமானம் ஏர்-இந்தியா ஒன்று என அழைக்கப்படுகின்றது. பிரதமர் மோடி அவர்கள் விமானத்தில் பயணிக்கும் போது AIC001 அழைப்பு அடையாளத்துடன் இயக்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஏர் இந்தியாவுக்கு என்று தயாரிக்கப்பட்ட விமானங்களை அதிகமாக வாங்கியது.

மேலும் அநத அரசு இந்தியா ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா இரண்டிற்கும் அதிகமான விமானங்களை வாங்கியது. தற்போதைய நிலையில் இவை ஏர் இந்தியாவின் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா 12 போயிங் 777 விமானங்களை வாங்கியுள்ளது. அவற்றுள் இரண்டு மட்டும் VVIP சேவைக்காக தேர்வு செய்யப்பட்டது. இந்த ரக விமானங்கள் மாற்றங்கள் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. போயிங் 777 விமானத்தில் ஒன்று இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் மற்றொன்று அடுத்த மாதத்தில் பயன்பாட்டிற்கு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தும் விமானங்களில் ஒன்று ஏர்போர்ஸ் 1 அதிலுள்ள தகவல் தொடர்பு வசதியை தவிர மற்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும். இந்த ரக விமானங்கள் அதிநவீன பாதுகாப்பு அமைப்பு மற்றும் சுய பாதுகாப்பு அறைகள் கொண்டு சிறப்பு அமைப்பை பெற்றிருக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பயன்படுத்தும் போயிங் 747 விமானம்

வழக்கமாக பயன்படுத்தப்படும் பயணிகளின் ஜெட் விமானங்களைப் போல் தான் இருக்கும். அதில் தனிப்பட்ட சிறப்பு வசதிகள் ஏதும் இல்லை. புதிய விமானங்கள் VVIP பயணத்திற்காக தனிச்சிறப்புடன் கட்டமைக்கப்பட்டுள்ளன.

புதிய ஏர் இந்தியா 1 உட்புறத்தின் படங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் MLA ஜிது பட்வாரி பயன்படுத்திய படம் அந்த தனிவிமானத்திற்கு உரியது அல்ல என்பதும் பொய்யான தகவல்களை பிரதமர் நரேந்திர மோடியின் மீது காங்கிரஸ் தலைவர் ஜிது பரப்ப முயன்றுள்ளார் என்பதும் இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News