Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கை அதிகாரியை எரித்துக் கொன்ற பாகிஸ்தான் கும்பல்!

பாகிஸ்தானில் பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த பிரியந்தா குமாரா என்பவரை முஸ்லீம் கும்பல் எரித்துக்கொன்றுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அதிகாரியை எரித்துக் கொன்ற பாகிஸ்தான் கும்பல்!
X

ThangaveluBy : Thangavelu

  |  4 Dec 2021 4:31 PM IST

பாகிஸ்தானில் பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த பிரியந்தா குமாரா என்பவரை முஸ்லீம் கும்பல் எரித்துக்கொன்றுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையை சேர்ந்தவர் பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஒரு தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் முஸ்லீம் மதத்தை இழிவாக கூறியதாக தொழிற்சாலையில் பணிபுரிந்த 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் கும்பல் அவரை அடித்து, சாலையில் இழுத்து சென்று கொடுரமான முறையில் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தால் பஞ்சாப் மாகாணத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. சம்பவத்தை தொடர்ந்து போலீசார் வன்முறை கூட்டத்தை தடியடி நடத்தி கலைத்து, உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றியுள்ளனர். இந்த கும்பல் தொடர்புடைய 50 பேரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கையை சேர்ந்தவர் பாகிஸ்தானில் கொடுரமான முறையில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பாகிஸ்தானுக்கு அவமான நாள் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News