Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் 20 லட்சம் கோடியை நெருங்கிய மொபைல் போன் உற்பத்தி!

இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தி 20 லட்சம் கோடியை நெருங்கியதாக செல்லுலார் மற்றும் மின்னணு சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 20 லட்சம் கோடியை நெருங்கிய மொபைல் போன் உற்பத்தி!

KarthigaBy : Karthiga

  |  9 March 2024 12:42 PM GMT

நடப்பு நிதியாண்டில் இந்திய மொபைல் துறை ரூபாய் 19.45 லட்சம் கோடி உற்பத்தி மைகல்லை எட்டும் என இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு சங்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு சங்கம் தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரூ தெரிவித்திருப்பதாவது :-


2030ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போதைய 3.7 டிரில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 7 டிரில்லியன் அமெரிக்க டாலராக இரட்டிப்பாக்குவது டிஜிட்டல் துறை மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. அடுத்த கட்டமாக பெரிய அளவிலான உற்பத்தி வேலைகளை உருவாக்கவும் உள்நாட்டு மதிப்பு கூட்டல் அதிகரிக்கவும் இந்தியா மாறுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு முன் எப்போதும் இல்லாத போட்டித் தன்மையும் ஒருபோதும் கண்டிராத அளவில் செயல்படக்கூடிய தொழிற்சாலைகள் தேவை 2014 பதினைந்தில் இந்தியாவிலிருந்து மொபைல் போன் ஏற்றுமதி வெறும் ரூபாய் 1556 கோடியாக இருந்தது.


அதுவே 2024 ஆம் நிதி ஆண்டில் ரூபாய் 1.2 லட்சம் கோடி ஏற்றுமதி செய்யப்படும் என்று தொழில் துறை எதிர்பார்க்கிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் ஏற்றுமதி 7500 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இந்திய செல்லுலார் மின்னணு சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மொபைல் ஃபோன்களிலும் 97 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்றும் 2024 நிதியாண்டில் அது 30 சதவீத உற்பத்தி இப்போது ஏற்றுமதிக்காகவே இருக்கும் என்றும் தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது .


2014 - 24 காலகட்டத்தில் மொபைல் போன்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ரூபாய் 3.22 லட்சம் கோடியை எட்டியது. இது மொபைல் ஃபோன்களை இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஏற்றுமதி பொருளாக மாற்றியது. இந்தியா 2014ல் இருந்த அளவுக்கு இறக்குமதியை சார்ந்து இருந்திருந்தால் பத்து ஆண்டுகளில் மொபைல் போன் இறக்குமதி மட்டும் ரூபாய் 14.34 லட்சம் கோடியாக இருந்திருக்கும் என்று இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு சங்கம் தெரிவித்தது.


SOURCE :Kaalaimani.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News