Kathir News
Begin typing your search above and press return to search.

நவீன இஸ்லாமிய சிந்தனையாளர் ஆரிப் முகம்மதுகான் கேரள கவர்னராக பதவி ஏற்றார்!! நல்ல இஸ்லாமியரை பெருமை படுத்திய மோடி அரசு!!

நவீன இஸ்லாமிய சிந்தனையாளர் ஆரிப் முகம்மதுகான் கேரள கவர்னராக பதவி ஏற்றார்!! நல்ல இஸ்லாமியரை பெருமை படுத்திய மோடி அரசு!!

நவீன இஸ்லாமிய சிந்தனையாளர் ஆரிப் முகம்மதுகான் கேரள கவர்னராக பதவி ஏற்றார்!! நல்ல இஸ்லாமியரை பெருமை படுத்திய  மோடி அரசு!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Sep 2019 9:06 AM GMT


தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமனம் செய்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த நிலையில், கேரள மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டார்.


இந்நிலயில், திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ் பவனில் இன்று நடைபெற்ற விழாவில் கேரள மாநிலத்தின் புதிய கவர்னராக ஆரிப் முகமது கான் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.


முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அம்மாநில மந்திரிகள், சட்டசபை உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் கேரளா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆரிப் முகமது கானுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


கேரள ஆளுநராக பதவி ஏற்ற ஆரிப் முகமது கான் நேற்று பதவியேற்க திருவனந்தபுரம் வந்த போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முதல்வர் பினராயி விஜயன் வரவேற்க வரவில்லை.


ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவரின் அமைச்சரவையில் இடம் பெற்றவர் ஆரிப் முகமது கான். உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் பெண் ஷா பானு தொடர்ந்த புரட்சி கரமான வழக்கில், ராஜீவ் காந்தி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.


பழமைவாத முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை வாக்கு அரசியலுக்காக ஏற்று ராஜீவ் அரசு முஸ்லிம் பெண்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தபோது சட்டத்துக்கு எதிராகப் பேசியவர் ஆரிப் முகமதுகான். அதுமட்டுமல்லாமல் அரசுக்கு எதிராகப் பேசி தனது, அமைச்சர் பதவியையும் ஆரிப் கான் ராஜினாமா செய்தார்.


இதைத் தொடர்ந்து ஜனதா கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு சென்று கடைசியாக பாஜகவுக்கு வந்த அவரை அவருடைய நவீன இஸ்லாமிய கருத்துக்களுக்காக பாஜக ஏற்றுக் கொண்டது .


முஸ்லிம் மக்களின் முன்னேற்றத்துக்காகவும், சீர்திருத்தம் செய்யவும் பல்வேறு கருத்துகளையும், நூல்களையும் எழுதினார். குறிப்பாக முத்தலாக்கை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மத்திய அரசு முத்தலாக்கை கிரிமினல் குற்றமாக சட்டத்தில் கூறியதையும் முகமது கான் வரவேற்றார். அவர் தற்போது கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News