இல்லம் சென்று அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய பிரதமர் மோடி ,உள்துறை அமைச்சர் அமித்ஷா !
இல்லம் சென்று அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய பிரதமர் மோடி ,உள்துறை அமைச்சர் அமித்ஷா !
By : Kathir Webdesk
பாஜக மூத்த தலைவரான அத்வானிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்ளிட்டோர் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்,பாஜகவின் பீஷ்மர் என்று அழைக்கப்படுபவர். எல்.கே.அத்வானி. இந்தநிலையில் அத்வானியின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, ஆகியோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.வருடா வருடம் அவரது பிறந்த நாள் தினத்தன்று அத்வானியின் வீட்டுக்கே சென்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.
ராமர் கோவில் கட்டவேண்டும் என்று நாடு முழுக்க, ரத யாத்திரை நடத்தி, பாஜகவுக்கு ஆதரவு திரட்டியவர் அத்வானி. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் பெறுகிறது, இதன்பிறகு, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவும், அத்வானி இல்லத்திற்கு வந்து வாழ்த்து தெரிவித்தார்.