Kathir News
Begin typing your search above and press return to search.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த 12 அம்ச திட்டம் - மோடி அறிவிப்பு!

தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஒத்துழைப்பு வெளிப்படுத்த 12 அம்ச திட்டம் ஒன்றை பிரதமர் மோடி முன்வைத்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த 12 அம்ச திட்டம் - மோடி அறிவிப்பு!

KarthigaBy : Karthiga

  |  8 Sep 2023 5:45 AM GMT

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருபதாவது தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு இந்தியா உச்சி மாநாடு மற்றும் கிழக்காசிய உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடாடோ அழைப்பு விடுதிருந்தார் .அதன் பெயரில் நேற்று முன்தினம் இரவு பிரதமர் மோடி இந்தோனேசியாவுக்கு புறப்பட்டார் .நேற்று அதிகாலை அங்கு போய் சேர்ந்தார். மாநாட்டு அரங்கத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-


ஆசியான் அமைப்புடன் இந்தியாவுக்கு 40 ஆண்டு கால தொடர்பு இருக்கிறது. இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த 12 அம்சதிட்டம் ஒன்றை முன்வைக்கின்றேன். இதன்படி பயங்கரவாதம் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி இணையதள பொய் பிரச்சாரம் ஆகியவற்றுக்கு எதிராக கூட்டாக போராட வேண்டி இருக்கும் டிஜிட்டல் புரட்சியில் ஒத்துழைப்புக்காக இந்திய - ஆசியான் நிலையம் அமைக்கப்படும். தென்கிழக்கு ஆசியா, இந்தியா , மேற்கு ஆசியா ,ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் பன்முனை இணைப்பகம் மற்றும் பொருளாதார வழி தடத்தை உருவாக்க வேண்டும் .


இந்தியா ஆசியா நாடுகளிடையே வர்த்தக பொருளாதார ஒத்துழைப்பு பெருக்க வேண்டும். மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு அதிகரிக்க வேண்டும். ஆசியான் இந்தியா தடையற்ற வர்த்த ஒப்பந்தத்தை கால வரையறையுடன் மறு ஆய்வு செய்ய வேண்டும். தெற்குலக நாடுகள் சந்திக்கும் பிரச்சனைகளை பன்னாட்டு அமைப்புகளில் எழுப்ப வேண்டும்.


இந்திய மக்களுக்கு மலிவான விலையில் மருந்துகளை அளித்து வருகிறோம் . அந்த அனுபவத்தை ஆசியா நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன். பேரிட நிர்வாகத்தில் ஒத்துழைப்புக்கு முன் வர வேண்டும். கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க கூட்டு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News