Kathir News
Begin typing your search above and press return to search.

'சந்தேஷ்காளி பெண்' வேட்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மோடி -சக்தியின் வடிவம் என புகழாரம்!

'சந்தேஷ்காளி' கிராமத்தைச் சேர்ந்த பெண் வேட்பாளருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பேசி சக்தியின் வடிவம் என புகழாரம் தெரிவித்துள்ளார்.

சந்தேஷ்காளி பெண் வேட்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மோடி -சக்தியின் வடிவம் என புகழாரம்!

KarthigaBy : Karthiga

  |  27 March 2024 10:29 AM GMT

மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரேகா பத்ராவை பாசிர்ஹட் பாமக்களவைத் தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்திருந்த நிலையில் அப்பெண்ணுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார். அவரை சக்தியின் வடிவம் எனவும் பிரதமர் பாராட்டினார்.

மேற்குவங்க மாநிலம் சந்தோஷ் காளி கிராமத்தில் நில அபகரிப்பு, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்தல் உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் அவரை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து தலை மறைவாக இருந்த ஷாஜகான் ஷேக்கை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். போராட்டத்தில் பங்கேற்ற பாதிக்கப்பட்ட ரேகா பத்ரா என்ற பெண்ணை பாசிர்ஹட் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக பாஜக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இந்நிலையில் அப்பெண்ணுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார். அப்போது தேர்தல் பிரச்சாரம் மக்கள் ஆதரவு குறித்து பிரதமர் அவரிடம் கேட்டறிந்தார். மேலும் அவரை சக்தியின் வடிவம் எனவும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமருடனான உரையாடல் குறித்து ரேகாபத்ரா கூறியதாவது :-

துணிச்சலான மற்றும் தன்னம்பிக்கையான வார்த்தைகளை கூறிய பிரதமர் மோடிக்கும் வேட்பாளராக தேர்வு செய்த பாஜகவுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .ஆனால் சந்தேஷ் காளி மக்கள் எனக்கு துணையாக நிற்கின்றனர். நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண் எனது கணவர் கேரளம் ,தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பணியாற்றி வருகிறார். வெளி மாநிலங்களுக்கு செல்லாமல் இப்பகுதி மக்கள் இங்கேயே பணியாற்றுவதற்கான வசதிகளை செய்து தர நான் முயற்சிகள் மேற்கொள்வேன் என்றார்.


SOURCE :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News