Kathir News
Begin typing your search above and press return to search.

நேருவால் ஏற்பட்ட பேரழிவுகளை மோடி சரி செய்கிறார்!!

நேருவால் ஏற்பட்ட பேரழிவுகளை மோடி சரி செய்கிறார்!!

நேருவால் ஏற்பட்ட பேரழிவுகளை மோடி சரி செய்கிறார்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Sep 2019 5:11 AM GMT



“ஹவுடி மோடி” என்பது ஒரு புத்துணர்வு வார்த்தைகள் மட்டுமல்ல, இது இந்தியா-அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம். இந்தியாவும், அமெரிக்காவும் ஜனநாயக நாடுகளாக இருப்பதால், மலட்டு கம்யூனிசத்தின் கேடுகெட்ட ஆத்மாவை ஒழிப்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் நீண்ட கால கூட்டாளிகளாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த இரு நாடுகளும் நீண்ட காலமாகவே சண்டைக்காரர்கள் போன்றே இருந்து வந்துள்ளன. இதற்கு விதை போட்டவர் முள்ளாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இது 1947 முதல் 1964 வரை பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்தபோது நடந்த முட்டாள் தனமான நடவடிக்கைகளால் ஏற்பட்ட பேரழிவு.
அமெரிக்காவிலும் குறைபாடுகள் உள்ளன. ஆனால் கம்யூனிஸ்ட் சீனாவைவிட மோசமானது அல்ல. எனவே அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து சாதிப்பதற்கு நிறைய உள்ளன. ஆனால் அதற்குமுன்பு, கடந்த காலத்தின் வேதனையான நினைவுகளை சுத்தமாக துடைதெடுக்க வேண்டியது முக்கியம். அப்போதுதான் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.
ஏறக்குறைய 200 ஆண்டுகளாக அமெரிக்கா, உலகின் பணக்கார நாடாக உள்ளது. ஆனால், கடந்த 2,000 ஆண்டுகளில் 1,700 ஆண்டுகளாக இந்தியாதான் உலகின் செல்வந்த நாடாக இருந்ததுள்ளது. அமெரிக்கர்கள், இந்தியாவின் திறமையை நன்கு அறிந்திருந்தனர். அதனால்தான், இந்திய சுதந்திர போராட்டத்தின்போது, நம்மை அமெரிக்கர்கள் ஆதரித்தனர்.
1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நமது அப்போதைய பிரதமர் நேருவை அரசுமுறை பயணமாக அமெரிக்கா வருமாறு, அமெரிக்கா அழைத்தது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவருக்கு நமது நாட்டின் எதிர்காலத்தைவிட அவரின பிரிட்டிஷ் நண்பர்கள்தான் முக்கியமாக தெரிந்தது.
1948-ஆம் ஆண்டு, அமெரிக்கர்கள் மீண்டும் அழைத்தது. அப்போது நேரு 1949 அக்டோபரில் மூன்று வாரங்கள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள ஒப்புக்கொண்டார். ஆனால் இந்த பயணம் படுதோல்வியில் முடிந்தது.
மோசமான விஷயம் என்னவென்றால், பிரதமர் நேரு தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை ஒரு இன்ப சுற்றுலா பயணமாகவே கருதினார். வேலைகளுக்கு இடையே ஒரு ஓய்பு சுற்றுலா என்ற வகையிலேயே இந்த அமெரிக்க பயணத்தை நேரு பயன்படுத்திக் கொண்டார்
நேருவுடன் வாஷிங்டனுக்குச் சென்ற இந்தியாவின் அப்போதைய நிதியமைச்சர் சி.டி. தேஷ்முக், இந்தியாவில் அமெரிக்காவின் முதலீடு குறித்த விரிவான பேச்சுவார்த்தைகளை நேரு புறக்கணித்ததாக பின்னர் குறிப்பிட்டார். ஒரு வளமான இந்தியாவை உருவாக்கும் கடின உழைப்பைச் செய்வதற்குப் பதிலாக, எந்த ஆர்வத்தையும் காட்டாதவராகவே நேரு செயல்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தோழர்கள், நேருவின் இடதுசாரி பிரிட்டிஷ் நண்பர்கள் மற்றும் லூயிஸ் மவுண்ட்பேட்டன் போன்றவர்களால் இந்திய - அமெரிக்க உறவுக்கு அப்போதே மண்ணை வாரி போட்டு விட்டார் நேரு.
அமெரிக்க பயணம் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அமெரிக்கர்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தியது.
1949-ஆம் ஆண்டு, இந்தியா - அமெரிக்க உறவில் மீண்டும் பிளவுகளை ஏற்படுத்தினார் நேரு. சீனாவுக்கு முழு அங்கீகாரத்தை வழங்குவதாக இந்தியா முடிவு எடுத்தது. நேருவின் இந்த முடிவை அமெரிக்கர்கள் முழுமையாக எதிர்த்தனர். ஏனெனில் இது கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க கொள்கைக்கு முற்றிலும் எதிரானது என்று அவர்கள் உணர்ந்தனர்.
மேலும், பொருளாதார உதவி மற்றும் ஜனநாயக நாடுகளுக்கு கம்யூனிசத்தால் ஏற்பட்ட அச்சுறுத்தல் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி பேச நேரு மறுத்துவிட்டார். இதுவும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் உள்பட அமெரிக்கர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுதியது.
இதற்கிடையே, “நாடு, நேருவின் பாதுகாப்பான கைகளில் உள்ளது” என்று மகாத்மா காந்தி கூறியது தவறானது என்று நிரூபிக்கப்பட்டது. இந்தியா மிகவும் மோசமான கைகளில் இருந்தது. அண்டை நாடுகளான பாக்கிஸ்தான் மற்றும் சீனா இரண்டையும் ஆயுதங்களை வாங்கி குவித்து பலப்படுத்தி அவைகளை மிக சக்திவாய்ந்த எதிரிகளாக்கினார் நேரு.
நமது நாடு சுதந்திரம் அடைந்து 4 ஆண்டுகளுக்குள், சுதந்திர போராட்டத்தின்போது இந்தியா பெற்றிருந்த அனைத்து நல்லெண்ணங்களையும் நேரு கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டார்.
எய்சன்ஹோவர் (1956) மற்றும் ஜான் எப்.கென்னடி (1961) ஆகிய அமெரிக்க அதிபர்கள் ஆட்சியின் போது, அமெரிக்காவிற்கு நேரு மேற்கொண்ட பயணங்கள் மூலம் இந்திய - அமெரிக்க உறவில் எந்த முன்னேற்றத்தையும் அவர் ஏற்படுத்தவில்லை.
நேரு மேலும் ஒரு இமாலயத் தவறை செய்தார். அதற்கான விலையை இந்தியா அன்றிலிருந்து இன்றுவரை செலுத்தி வருகிறது. அமெரிக்க அதிபர் எய்சன்ஹோவர், ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடத்தையும், வீட்டோ அதிகாரத்தையும் வழங்க முன்வந்தார். ஆனால் நேரு அதை தனது திமிரால் உதறித்தள்ளினார். அதோடு அந்த வாய்பை சீனாவுக்கு வழங்க சிபாரிசு செய்தார். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது பின்னர் தெரிந்தது.

அமெரிக்காவுடனான உறவை இந்தளவு நேரு காலில் போட்டு மிதித்தபோதிலும், அதன்பிறகும் இந்தியா மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த அமெரிக்க அதிபர் கென்னடி. அவர் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக உதவ முன்வந்தார். அதையும் தனது திமிரால் பயன்படுத்தவில்லை நேரு.



நேருவின் மற்றுமொரு மிகப்பெரிய தோல்வி என்னவென்றால், அமெரிக்கர்களுக்கு முக்கிய நண்பன் இந்தியாதான் என்பதை புரிந்துகொள்ளாமல் போனதே. ஆனால் பாகிஸ்தான் 1954-ஆம் ஆண்டிலேயே ஒரு பயனுள்ள நட்பு நாடாக மாறி இருந்தது..


பல இந்தியர்களை பாதித்த அமெரிக்க எதிர்ப்பு மற்றும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரால் இன்று மேற்கொள்ளப்படும் இந்திய விரோத உணர்வு, நேருவின் வெளியுறவுக் கொள்கையின் மிகப்பெரிய தோல்வியே என்பதில் ஐயமில்லை.


ஆனால் நேரு செய்த தவறுகளையெல்லாம் சரிசெய்யும் மிக முக்கிய பணி, இப்போது நரேந்திர மோடி தலையில் விழுந்து உள்ளது. மோடி இதை சரிசெய்தால் மட்டுமே இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் நண்பர்களாக செயல்பட முடியும்.



ஆமாம், ரௌடி நேருவால் வந்த பேரழிவுகளை ஹவுடி மோடி சரி செய்கிறார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News