மூன்று கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மோடி அரசு உறுதி!
மூன்று கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
By : Karthiga
நாடு முழுவதும் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க தான் உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். சத்தீஸ்கரில் திருமணமான பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 நிதி உதவி வழங்கும் மாநில பாஜக அரசின் திட்டத்தை காணொளி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து பேசுகையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.
'பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இதன் கீழ் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவர்கள் வங்கி கணக்கில் மாதந்தோறும் தலா 1000 நேரடியாக செலுத்தப்பட உள்ளது. தாய்மார்களும் சகோதரிகளும் அதிகாரம் பெற்றால் ஒட்டு மொத்த குடும்பமும் அதிகாரம் பெறும். பாஜகவின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. பெண்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 10 கோடிக்கு மேற்பட்ட பெண்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
'நமோ ட்ரோன் சகோதரி' திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ட்ரோனியக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வேளாண்மைகளுக்காக வாடகை சேவையை வழங்கும் நோக்கில் சுமார் 15,000 பெண்களுக்கு பயிற்சியுடன் ட்ரோன் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்" என்றார் பிரதமர்.சதீஸ்கரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோற்கடித்து பாஜக ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
SOURCE :Dinamani