மோடி அரசின் அடுத்த சாதனை! தண்ணீருக்கு அடியில் ரயில்! பியூஷ் கோயல் தகவல்!!
மோடி அரசின் அடுத்த சாதனை! தண்ணீருக்கு அடியில் ரயில்! பியூஷ் கோயல் தகவல்!!
By : Kathir Webdesk
இந்தியாவிலேயே முதல் முறையாக கோல்கட்டாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
நாட்டிலேயே முதல் முறையாக கோல்கட்டாவில் ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவையை துவக்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த மெட்ரோ பணிகள் தொடர்பான வீடியோவை பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“நீருக்கு அடியில் ரயில் பாதை அமைப்பது என்பது தலைசிறந்த இன்ஜினியரிங் பணிக்கு ஒரு எடுத்துக்காட்டு. நாட்டின் ரயில்வேயின் வளர்ச்சிக்கு அடையாளமாக இந்த ரயில் இருக்கும். இதனால் கோல்கட்டாவாசிகள் நிம்மதியாகவும், நாட்டு மக்கள் பெருமையாகவும் உணர்வார்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்திய ரயில்வே சார்பில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் ஆற்று நீர் உள்ளே கசியாத அளவிற்கு 4 பாதுகாப்பு அடுக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 16 கி.மீ., தூரத்திற்கு போடப்பட்டுள்ள இந்த ரயில் பாதை உப்பு ஏரி பகுதி மற்றும் அவுரா உப்பு ஏரி மைதான ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும்.
5 நிறுத்தங்கள் கொண்ட இந்த ரயில் சேவை முதல் 5 கி.மீ., வரை இம்மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது.